உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11,372 நீர்நிலைகளின் டிஜிட்டல் வரைபடங்கள் தயார்: நில அளவை துறை நடவடிக்கை

11,372 நீர்நிலைகளின் டிஜிட்டல் வரைபடங்கள் தயார்: நில அளவை துறை நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 11,372 நீர்நிலைகள், டிஜிட்டல் முறையில் துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு, அதன் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், 41,948 ஏரிகள் உள்ளன. ஆனால், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால், ஏரிகள் இருந்த அடையாளங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'மாவட்டம், தாலுகா வாரியாக, ஏரிகள் குறித்த செயற்கைக்கோள் வரைபட விபரங்களை வெளியிட வேண்டும்' என, சில ஆண்டுகளுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடவடிக்கை

அதன்படி, ஏரிகள் குறித்த செயற்கைக்கோள் வரைபட விபரங்களை, வருவாய் துறை வெளியிட்டது. ஆனாலும், பெரும்பாலான மக்களால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுதும் நில அளவை பணிகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நீர்நிலைகளின் டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, நில அளவை துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் நீர்நிலைகளை, டிஜிட்டல் முறையில் நில அளவை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 2021 மே மாதம் துவங்கிய இப்பணியில், 14,116 ஏரிகள் தொடர்பான நில அளவை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில், 11,372 நீர்நிலைகளின், டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த விபரங்கள், https://tngis.tn.gov.in/waterbodies/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், மாவட்டம், தாலுகா, கிராமம் பெயரை தேர்வு செய்து, அங்குள்ள நீர்நிலைகளின் வரைபடங்களை பார்க்கலாம்.

செயற்கைக்கோள்

சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் அமைவிடத்தை, துல்லியமாக காட்டும் செயற்கைக்கோள் வரைபடம், அதன் சர்வே எண், எல்லைகள் குறித்த விபரங்களை, பொதுமக்களும், பல்வேறு துறையினரும் எளிதாக அறியலாம்.குறிப்பாக, ஒவ்வொரு நீர்நிலையின் சர்வே எண் அடிப்படையில், அசல் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால், ஆக்கிரமிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V B Raja
ஜூலை 07, 2025 17:08

சென்னை பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனை பின்புறம் Embassy residents அருகில் casagrand residents உள்ளது இந்த குடியிருப்பின் பின்புறம் நீர்நிலை பகுதிகள் உள்ளது நல்ல மழை பெய்தால் ஏரி போல் நீர் பரவலாக நிற்கும் இந்த Brigade என்ற நிறுவனம் வீட்டு கழிவுகளை ரப்பீஸ் ஜல்லி மண் போன்றவற்றை கொட்டி அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது இதற்கு முன்னர் அந்த பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இருந்தது சிறிது நாட்கள் கழித்து அந்த நிறுவனம் தனது பணியை செய்து வருகிறது நீதிமன்றம் விதித்த தடை என்னவானது தெரியவில்லை நீர்நிலை பகுதி கபளிகரம் தனியார் நிறுவனத்தினால் செய்யப்படுகிறது தங்கள் பார்வைக்கு கொண்டுவந்து உள்ளேன் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் ஆவண செய்வீர்கள் என நம்புகிறேன்


Kudandhaiyaar
ஜூலை 07, 2025 04:54

என் வீட்டருகே பாசன வாய்க்கால் இருக்கிறது அதை அக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டிவிட்டார்கள் தொடர்ந்து 200 குடும்பங்கள் அனைத்தும் அணைத்து கட்சியை சார்ந்தவர்கள் ஆக்ரமிப்பு செய்டடல், கடை, மடைக்கு தண்ணீர் போவதில்லை. நீதிமன்றம் செயல்படாத கலெக்டர் ஐ மாற்றியும், புதிய கலெக்டர் இடிக்க ஏற்பாடு பண்ணி தூங்கிவிட்டார் ஏனெனில் அரசியல் தலையீடு. கர்நாடக ஏன் தண்ணீர் கொடுக்க வேண்டும் இருக்கும் நீர் நிலை ஆக்ரமிப்பு மற்றும் தூர் வாரினாலே நாமே அடுத்த நாட்டுக்கு தண்ணீர் தரலாம். நானும் 25 ஆண்டுகளாக விடியுமா என பார்க்கிறேன். பட்டா கொடுத்து, மின்சாரம் கொடுத்தது யார் குற்றம். குடிசை வீடுகளாக தொடங்கி தற்போது கட்டிடங்களாக இருக்கிறது. கோவில்களை இடிக்க தூண்டும் அரசுக்கு நடவடிக்கை எடுக்க தெரியாதா


Kasimani Baskaran
ஜூலை 07, 2025 03:32

வேளச்சேரி முன்னர் நீர் நிலைகளாக இருந்த இடம்தான். இன்று நகரம். பெருமழை வந்தால் மிதக்கதான் செய்யும்.


முக்கிய வீடியோ