| ADDED : செப் 23, 2011 10:56 PM
பிரவுசர் மற்றும் ஆப்பிள் ஐ பாட் தொழில் நுட்ப வடிவில் வெளியாகி வரும் உங்களுடைய தினமலர் தற்போது ஆண்ட்ராய்டு வடிவிலும் வெளிவருகிறது. இந்த புதிய அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இதனை டவுன்லோட் செய்து தினமலர் செய்திகளைப் பார்த்து வருகின்றனர்.
உங்கள் ஆண்ட்ராய்டில் தினமலர் இதழை பார்வையிடுவதற்கு வசதி செய்யும் அப்ளிகேஷன்தான் இது. தினமலர் அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு மார்ககெட்டிலிருந்து நீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளமுடியும். உங்களுக்கு விருப்பமான தினமலர் இதழை பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படித்து மகிழலாம். உடனுக்குடன் செய்திகள் மற்றும் தகவல்களை இந்த அப்ளிகேஷன் மூலம் பெறலாம். தினமலர் இதழின் பிரத்யேக பகுதிகளான டீ கடை பெஞ்ச் உள்ளிட்ட பகுதிகளையும் பார்க்கலாம். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். சினிமா,விளையாட்டு, தமிழகச் செய்திகள், மாவட்டச் செய்திகளையும் படிக்கலாம். தினமலர் இதழை ஆண்ட்ராய்டு 1.6 மற்றும் அதற்கு மேல் உள்ள versionல் எளிதாகப்பார்க்கலாம்.
Android Market link : https://market.android.com/details?id=com.softcraft.dinamalar