உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்.,20ல் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அக்.,20ல் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(அக்.,18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9vyns8ur&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று(அக்.,17) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(அக்.,18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் அக்டோபர் 20ம் தேதி கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 17, 2024 17:14

ஜப்பசியில் அடை மழை இது தெரிந்த ஒன்று தானே. வருடாவருடம் பருவ நிலைகள் மாறி மாறி வந்து கொண்டு தான் உள்ளது.


sundarsvpr
அக் 17, 2024 15:41

மேகம் கூடினால் மழை பெய்யவேண்டும். ஆனால் பொய்த்துவிடுகிறது. ஆனால் மேகம் கூடாமல் மழை பெய்திட வாய்ப்பு உண்டா? அப்படி நிகழ்வு நடந்துஇருக்கலாம். சிரபுஞ்சியில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. நம் அறிவிற்கு அப்பால் நிகழ்வுகள் நடந்துகொண்டுஇருக்கின்றன. நிகழ்வு நடப்பதற்கு முன் தலைமை அமைச்சர் துணை தலைமை அமைச்சர் செல்வதில்லை. ஏன்? சேதம் அடைந்த பிறகு நிவாரண நிதி வழங்குவதில் தலை காட்டுகிறார்கள். .


Smba
அக் 17, 2024 14:59

இந்த ஐப்பசி மாதம் முழுவதும் இருக்கும் இதுல போயி


புதிய வீடியோ