உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியருக்கு தொந்தரவு தலைமை ஆசிரியர் கைது

மாணவியருக்கு தொந்தரவு தலைமை ஆசிரியர் கைது

விழுப்புரம்: மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் திருவிக்ரமன், 59, கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார், அறுங்குறுக்கை புதுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக திருக்கோவிலுாரைச் சேர்ந்த திருவிக்ரமன் பணிபுரிகிறார். இவர், 5ம் வகுப்பு பயிலும் மாணவியர் சிலருக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியர், பெற்றோரிடம் தெரிவித்தனர். கிராம மக்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மகளிர் போலீசார், திருவிக்ரமனை, ‘போக்சோ’வில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இளமதி, திருவிக்ரமனை ‘சஸ்பெண்ட்’ செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை