உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., ஆல்பா கொரோனா த.வெ.க., பீட்டா கொரோனா

 தி.மு.க., ஆல்பா கொரோனா த.வெ.க., பீட்டா கொரோனா

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் வேண்டுகோளை ஏற்று, இடைச்செருகல் தீர்மானத்தை முதல்வர் விஜய் நிறைவேற்றினார்.தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும்போது, காவிரி நீரைப் பெற, கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன? ​காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்னையில், த.வெ.க.,வும், தி.மு.க.,வும் இணைந்து நாடகமாடுகின்றன. மக்கள் விரோத நடவடிக்கைகளில், தி.மு.க., 'ஆல்பா கொரோனா வைரஸ்' என்றால், த.வெ.க., 'பீட்டா கொரோனா வைரஸாக' செயல்படுகிறது. - இன்பதுரை, அ.தி.மு.க., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஜூலை 28, 2026 17:09

1000% சரியான தீர்ப்பு கொரோனா


duruvasar
ஜூலை 28, 2026 11:28

ஆல்பாவோ , பீடாவோ , ஸ்பெல்லிங்கே தெரியாதவர்ககிடம் என்ன எதிர்பார்க்கமுடியும். ?


manituticorin
ஜூலை 28, 2026 09:37

அப்போ Gama கொரோனா வைரஸ் யாருங்க?