உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதிக்கு ஒரு பார்வையாளர்; தேர்தல் பணியில் தி.மு.க., விறுவிறு!

தொகுதிக்கு ஒரு பார்வையாளர்; தேர்தல் பணியில் தி.மு.க., விறுவிறு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான பணிகளில் தி.மு.க., வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. அதற்காக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அண்மையில் அமைக்கப்பட்டது. குழுவில் தி.மு.க., இளைஞரணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடம்பெற்றுள்ளனர்.இந்த குழுவின் ஆலோசனைகளின்படி, 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை தற்போது நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் மேற்பார்வையிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மோகனசுந்தரம்
அக் 08, 2024 16:41

அடப் போயா! புத்திசாலிகள் ஆன தமிழக மக்கள் ஆயிரம் ரூபாய் காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவார்கள். எதற்காக நீங்கள் சிரமப்படுகிறீர்கள். கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தில் சிறிது எடுத்து விட்டால் போதும்.


Kasimani Baskaran
அக் 08, 2024 13:29

போடுகிற ஆட்டத்தைப்பார்த்தால் அடுத்த முறை தீம்காக்காரனே இவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டான்.


SUBBU,MADURAI
அக் 08, 2024 15:52

இந்த முறை இவன் தோற்பது உறுதி வழக்கம் போல இதுதான் என் கடைசி தேர்தல் என்று பயங்கரமாக சீன் போடுவான் ஆனால் இந்த தடவை இவன் தொகுதி மக்கள் இவனை கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பார்கள்.அத்துடன் இவனுடைய அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வரும்.


Venkatesan Ramasamay
அக் 08, 2024 12:22

சீக்கிரம் சீக்கிரம் ... தேர்தல் ... தேர்தல் ..என்று அதிலேயே குறியா இருக்கணும் ... இந்த தேர்தல் முடிந்தபிறகு அடுத்து பாராளுமன்ற தேர்தல் வரும்.. அதுக்கும் இப்போதிலிருந்தே குழு அமைக்கணும் ... ம்ம்ம்.. மக்கள் எப்படி போனா நமக்கென்ன உருப்படும் தமிழ்நாடு ...


Ramesh Sargam
அக் 08, 2024 12:12

இந்த அறிவிப்பை துரைமுருகன் தன்னிச்சையாக எடுத்து அறிவித்தாரா, அல்லது அந்த கருணா குடும்பத்தினரின் ஆணையின் பேரில், நேற்றுமுளைத்த வாரிசு துணைமுதல்வர் ஆணையின் பேரில் அறிவித்தாரா...? ஏன் கேட்கிறேன் என்றால் இவர், மற்றும் இவரைப்போன்ற மூத்த தலைவர்கள் முதுகெலும்ம்பு முறிந்தவர்கள்.


ஆரூர் ரங்
அக் 08, 2024 11:34

விநியோக மேற்பார்வையாளரா?


கிஜன்
அக் 08, 2024 10:29

து.மு வரும்போது எழுந்து நிற்கிறீர்களா ?


ராமகிருஷ்ணன்
அக் 08, 2024 09:40

ஓட்டுக்காக பணம் பட்டுவாடா பண்ண தொகுதி செயலாளர்கள் நியமணம் என்று திருத்தி வாசிக்கவும்.


Govinda raju
அக் 08, 2024 09:38

பார்வையாவது பொருட்பாவது கலை சாசு வாங்கிக்க ஓட்டு


Lion Drsekar
அக் 08, 2024 09:05

பாரவையாரே தேவை இல்லை, வெற்றி உங்களுக்குத்தான் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை, வந்தே மாதரம்


தமிழன்
அக் 08, 2024 08:24

மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுகவை அரசியல் வரலாற்றில் இருந்து அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதை மக்கள் மறந்து விட கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை