உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிமுகவை விமர்சிக்கும் திமுகவுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: சொல்கிறார் துரை வைகோ

மதிமுகவை விமர்சிக்கும் திமுகவுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்: சொல்கிறார் துரை வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்துார்: ''மதி.மு.க.,வை விமர்சிக்கும், தி.மு.க.,வுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும்'' என, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ கூறினார்.சேலம் கிழக்கு மாவட்ட, ம.தி.மு.க., மாவட்ட செயலர் கோபால்ராஜி இல்ல திருமண விழா, ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, ம.தி.மு.க., முதன்மை செயலரும், எம்.பி.,யுமான துரைவைகோ பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r64du2pw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ம.தி.மு.க.,வில், உண்மையாக உழைப்பு கொடுத்த திறமைசாலிகள் சிலருக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை; அவர்களை கட்சியும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதை ஆதங்கத்துடன் கூறுகிறேன். நான், முழுமையான அரசியல்வாதியாக இன்னும் ஆகவில்லை. தேர்தலில் எந்த கட்சி என்று பார்க்காமல், நல்லவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.தமிழக அரசியலில், த.வெ.க., புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. கடந்த, 25 ஆண்டுகளாக பணம் இருந்தால் தான் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட முடியும் என்று இருந்ததை பார்த்துள்ளோம். ஆனால், த.வெ.க., பணமில்லாமல் அரசியலில் வெற்றி என்ற மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்று பேசுவதால், அவர்களுக்கு ஆதரவாக நான் பேசவில்லை. உள்ளாட்சி தேர்தலில் பணம் செலவழித்தால் தான் பதவிக்கு வரமுடியும். 10 கோடி ரூபாய் இருந்தால் தான், எம்.எல்.ஏ., ஆக முடியும்; 40 கோடி ரூபாய் செலவு செய்தால் தான் எம்.பி.,யாக முடியும் என்ற நிலை இருந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 5 பைசா செலவு செய்யாமல் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது; இது மிகப்பெரிய மாற்றம். புதிய ஆட்சி மாற்றத்தை, த.வெ.க., கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம், தமிழக அரசியலில் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், 'நாங்கள் பேச ஆரம்பித்தால், ம.தி.மு.க., மொத்த வரலாறும் முடிந்துவிடும்' என்று கூறியது குறித்து, நிருபர்கள், துரை வைகோவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும், தி.மு.க.,வுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும்' என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Indhuindian
ஜூன் 30, 2026 05:09

முதல்லயே யோசனை பண்ணிக்கிட்டு அப்புறம் விலகியிருக்கணும் அப்படி செஞ்சிருந்தீங்கன்னா தயிரியமா பத்திரிகைக்கார்களை சந்திச்சிருக்கலாம். இப்பவும் ஒன்னும் கேட்டு போகல. உங்க நைனா தி மு க வை பத்தியும், ஸ்டாலின்,கருணாநிதியை பத்தியும் பேசின பேச்சையெல்லாம் ஒரு முறை கேட்டு பாருங்க


Kasimani Baskaran
ஜூன் 30, 2026 04:06

ஆல் வெயிட்டிங்... எமகண்டத்தில் பதில் கொடுத்தால் வெற்றி நிச்சயம்...


Indian
ஜூன் 30, 2026 03:12

துரோகிகளும் , நன்றி கெட்டவர்களும் இந்த நாட்டில் பெருகி விட்டனர் . பின்னர்


KR india
ஜூன் 30, 2026 00:08

திரு.ஸ்டாலினுக்கு ஒரு அரணாக நான் இருப்பேன் என்று திரு.கருணாநிதியின் கடைசி காலத்தில் திரு.வை.கோ, வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்பொழுது, வேறு கட்சிக்கு இடம் பெயர்ந்தால், தி.மு.க.வினர் விமர்சனம் செய்யத்தானே செய்வார்கள். எனினும், திரு.வை.கோ-வை ஒப்பிடும் போது, அவரது மகன் திரு.துரை.வை.கோ எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில், வை.கோ என்ற வை.கோபால்சாமியை போல், நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, திரு.துரை .வை.கோ பேசியதில்லை. முன்பு, வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த திரு.துரை.வை.கோ அவர்கள், தனக்கு பெரியாரும் வேண்டும் , பெருமாளும் வேண்டும் என்று கூறி இருந்தார். திரு.துரை.வை.கோ, ஏதோ, இந்த அளவாவது இருக்கிறாரே நன்றி


Vaithi
ஜூன் 30, 2026 00:03

இப்போது பதில் சொன்னால் உன் நாக்கு சுளுக்கி கொள்ளுமா


Venkatesh
ஜூன் 29, 2026 20:36

முட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்.,..... நீங்கள் உங்கொப்பரை விட வாழத்துணிந்த ஒருவர்


ராஜா
ஜூன் 29, 2026 20:14

அடுத்து ஆட்சி மாறும் நிலை ஒருவேளை வந்தால் நிபந்தனை இல்லாமல் திமுக காலில் விழுவோம் என்பதை தான் இப்படி சொல்கிறார். வையாபுரி நல்ல காமெடி நடிகர்.


duruvasar
ஜூன் 29, 2026 19:38

தமிழ்நாட்டுக்கு உள்ளே ஒரு தெலுங்கனை இனொரு தெலுங்கன் எதிர்க்கமாட்டான். சும்மாக்காட்டியும் கண்ணாமூச்சி காட்டுவானுங்கோ.


Aam Aathmi (Mango Man)
ஜூன் 29, 2026 19:23

கையில் கொடிய கட்டிண்டு புதிய திராவிட கலாச்சாரம்


முருகன்
ஜூன் 29, 2026 19:22

அதைக்கூட விஜய்யிடம் அனுமதி பெற்று தான் பேசுவார் இந்த தீப்பெட்டி சின்ன தலைவன்


புதிய வீடியோ