உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லிங்க் அனுப்பி பணம் மோசடி; தி.மு.க., நிர்வாகி, நண்பர் கைது

லிங்க் அனுப்பி பணம் மோசடி; தி.மு.க., நிர்வாகி, நண்பர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் பேஸ்புக் முகவரியில், பகுதி நேர வேலை என விளம்பரம் வந்துள்ளது. அதில், குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய நபர், 'ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்' என, ஆசை வார்த்தை கூறி உள்ளார்.மர்ம நபர் அனுப்பிய ஒரு லிங்கை கிளிக் செய்த வாலிபர், இணையதள பக்கத்தில், 1.50 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். முதலீட்டிற்கான லாபம் ஏதும் வரவில்லை.அந்த வாலிபர், துாத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோவில்பட்டி, கடலைக்கார தெருவை சேர்ந்த தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன், 30, அவரது நண்பர் கிங்ஸ்டன், 29, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 07:31

அந்த கழக கொள்கை மறவனை பாராட்ட தமிழில் வார்த்தை இல்லை ..


maran
ஜூன் 20, 2025 07:04

The members of present ruling party in Tamilnadu have now become technical experts


subramanian
ஜூன் 20, 2025 06:38

திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 07:32

ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க நினைக்கும் உங்கள் பகல் கனவு பலிக்காது .. கழகத்தின் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஊழல் இருக்கும் ..


Mani . V
ஜூன் 20, 2025 04:57

நாங்கள் யார்? ஊழலின் ஊற்றுக்கண் வளர்ப்புகள். ஊழலையும் எங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 07:35

நாங்களெல்லாம் தான்சானியா கரகாட்ட குழுவை வாடகைக்கு எடுத்து ஆடவிட்ட திராவிட மாடல் கட்சியை சேர்த்தவர்கள் ..


Kasimani Baskaran
ஜூன் 20, 2025 04:08

கட்சியே மோசடிக்கு பெயர் போனது... இதில் நிர்வாகி நேர்மையாக இல்லை என்பது என்ன பெரிய விஷயம். எளிதாக கடந்து போகவேண்டியது.