உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு

வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே தி.மு.க., முக்கியத்துவம் அளிக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், தி.மு.க., அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது. தி.மு.க., அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் தி.மு.க., அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது. https://x.com/NainarBJP/status/19417157390121249462021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு தி.மு.க., வழங்கிய வாக்குறுதியான (வாக்குறுதி எண் 313) 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்' என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Pandianpillai Pandi
ஜூலை 06, 2025 18:06

படிக்க தெரியாதவர்களிடம் எழுதிய காகிதத்தை கொடுத்தால் இதில் என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று சொல்லி காகிதத்தை கிழித்துவிடுவார்கள் அதுபோலத்தான் உங்கள் புலம்பலும். ஒன்றுமே செய்யாதவர்கள் மத்தியில் ஆட்சி செய்வதால் செய்பவர்களை பார்த்து பொறாமைதான் வரும். சமச்சீர் கல்வி கொண்டு வந்தபோது இதே போன்ற புலம்பல்கள் இருந்தன. ஆனால் சமச்சீர் கல்வி மூலம் உயர்கல்வி யை மக்கள் பெற்றிருக்கிறார்கள். தற்போது கேரளாவை விட கல்வியில் தமிழ்நாடு தன்னிறைவை பெற்றிருக்கிறது. தற்போதைய தலைமுறையினர் தன் குழுந்தைகளுக்கு சிறந்த கல்வியை தருகின்ற திறனை பெற்றிருக்கிறார்கள். என்றால் அதற்கு தி மு க வே கரணம். நாங்கள் மார்தட்டி கொள்வோம் பெருமை கொள்வோம் எங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதற்கு . தி மு க வை வஞ்சப்படுத்தியே பிழைப்பு நடத்துபவர்கள் எப்படி வெற்றிகொள்வார்கள் . உண்மைக்கு சக்தி அதிகம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 17:06

வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே தி.மு.க.,முக்கியத்துவம் அளிக்கிறது என தமிழக பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் ....... திமுக வளர்ந்தது எப்படியாம் ??


xyzabc
ஜூலை 06, 2025 13:32

தி மு க விளம்பரங்களால் செழிக்கும் கட்சி. மத்திய அரசை வஞ்சிக்கும் விளம்பரங்கள் கேட்க வேண்டாம். வோட்டு வங்கி.


Pmnr Pmnr
ஜூலை 06, 2025 13:13

இரண்டு கட்சிகளும் தான் வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது அப்படி எடுத்து கொள்ளலாம்


Ambedkumar
ஜூலை 06, 2025 12:50

அண்ணாமலை அவர்கள் கட்சித் தலைவராக இருந்தபோது பாஜகவின் குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்தது


rasaa
ஜூலை 06, 2025 12:18

அடடே நயினார் ஊரில்தான் உள்ளாரா?


Oviya Vijay
ஜூலை 06, 2025 11:28

நயினார் நாகேந்திரன் தாக்கு... தான் அண்ணாமலை மாதிரி புயல் இல்லை... தென்றல் அப்டின்னு அவரே அவரப் பத்தி முன்னதொரு பெட்டியில சாரி பேட்டியில சொல்லியிருக்காரு... இதுல தாக்கு பாக்கு அப்படின்னு எல்லாம் அவரப் பத்தி செய்தி போட்டா அவருக்கே சிரிப்பு வருமா இல்லையா...


vivek
ஜூலை 06, 2025 16:06

ஒரு இருநூறு ரூபாய் சொங்கி


Kjp
ஜூலை 06, 2025 16:15

அங்கன்வாடி மையங்களையும் மூடுவது சரியா தவறா? அதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் ஐயா. நைனா சரியான கேள்வி தான் கேட்டிருக்கிறார்.அதற்கு பதில் சொல்லத் திராணி இருக்கிறதா .இல்லையா


முருகன்
ஜூலை 06, 2025 11:12

உங்கள் உடன் கூட்டணி இல்லை என நெத்தியில் அடித்து சொல்லும் விஜய் மாதிரி


புதிய வீடியோ