உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்

அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி; இபிஎஸ் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நெல் கொள்முதலில் துவங்கி, கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட திமுக அரசு தோல்வி என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mwfkzfyf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.நெல் கொள்முதல் துவங்கி, கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட தோல்வி அடைந்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vasan
நவ 09, 2025 20:51

அப்படியென்றால் அந்த கோதுமை எங்கே?


என்றும் இந்தியன்
நவ 09, 2025 19:50

இப்படி படிக்கவும் "அத்தியாவசிய பொருட்களை அதாவது அறிவை மக்களிடம் சேர்க்கும் பணியில் திமுக அரசு தோல்வி இபிஎஸ் காட்டம்


Barakat Ali
நவ 09, 2025 19:16

தீயமுக எதில்தான் வெற்றி பெற்றுள்ளது ????


திகழ்ஓவியன்
நவ 09, 2025 14:42

செங்கோட்டியன் செய்யும் வேலை பார்த்தால் உங்களிடம் இரட்டை இல்லை இருக்குமா இல்லை நீர் பொதுச்செயலாளர் ஆக இருப்பீரா என்னவோ டெல்லியில் உல் வேலை நடக்குது என்கிறார்கள்


vivek
நவ 09, 2025 16:40

அத்யாவசிய பொருளான டாஸ்மாக் தாராளமாக கிடைக்கிறது


திகழ்ஓவியன்
நவ 09, 2025 14:41

நேற்று வந்த அரசியல் கட்சி உங்கள் கட்சி லிஸ்டில் இல்லை என்று சொல்லுகிறார் அவரை ஒரு பிடி பிடியுங்கள்


திகழ்ஓவியன்
நவ 09, 2025 14:40

தன்னுடைய கட்சிக்காரன் கிட்ட விஜய் கட்சி கோடி கொடுத்து அசிங்கப்பட்ட எடப்பாடி, செங்கோட்டியன் சொல்லுகிறார்


Durai Kuppusami
நவ 09, 2025 14:35

ஆம் முற்றிலும் உண்மை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை