உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு: அண்ணாமலை

தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னை, சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று( செப்.,02) காலை மழைநீர் வடிகால் நடைபாதையில் நடந்து சென்ற போது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளைமேடு போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ixbnwzlk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும், செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல, வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. மேலும், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இப்போது மற்றுமொரு பெண் உயிரிழந்திருக்கிறார். சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது பணிகள் நிறைவுபெறும் என்பது யாருக்குமே தெரியாது. ஒவ்வொரு உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.கடும் கோடைக் காலத்துக்குப் பின்னர், பெய்யும் மழைநீரை, பூமி உறிஞ்சிவிடும். ஆனால், நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளால்தான் தண்ணீர் தேங்கவில்லை என்று ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை? இந்த அழகில், சென்னை மழை குறித்து, ஜெர்மனியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார் என்று வெற்று விளம்பரம் வேறு.உடனடியாக, உயிரிழந்த பெண் குறித்த விவரங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ManiMurugan Murugan
செப் 03, 2025 00:12

அருமை சென்னையில் எந்த தொகுதி சென்னை எந்த தொகுதி செங்கல்பட்டு திருவள்ளூர் என்று அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக் கட்சி தி மு கா கூட்டணிக்கு தெரியுமா சென்னை பாக்கேஜ் புகழ் வெளிநாடுப் போல் சென்னையை மாற்ற பாக் கேப் போட்ட மேயருக்கு தெரியுமா இல்லை மேயருக்காக ஒப்பாரி வைக்கும் நாரவாய்க்கு தெரியுமா நாரவாயிடம் எதற்கு பேசினாய் என்று மிரட்டிொய சேகர்பாபுக்கு தெரியுமா இவர்கள் மழை வருவதற்குள் சீரமைப்பவர்கள் மெட்ரோக்காக ஒப் பாலை ப் பதுபிக்கப் போய்விட்டு முதலீடு என்று திரை கதை வசன நாடகம் எந்தக் கம்பெனியும போனவுடன் கையெழுத்து போடாது வந்து உரை ப் பார்த்துவிட்டு தான் பேச வே செய்வார்கள் அது நடக்கும் பல மாதம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி ஆப்பிரிக்கா போல இதுவும் ஒப்பாரி தான்


திகழ்ஓவியன்
செப் 02, 2025 21:28

அதுதானே சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்களே , மோடி க்கு குஜராத் முக்கியம் மற்ற மாநிலங்கள் தேவை இல்லை , இங்கு வர இருந்த செமி கண்டக்டர் கூட குஜராத்துக்கு திருப்பி விட பட்டது


திகழ்ஓவியன்
செப் 02, 2025 21:21

நிம்மி வருகை , செங்கோட்டையன் நிலை அதேபோல எல்லோரும் அண்ணாமலையின் எடப்பாடி நிலை மாற்றம் பற்றி புகழ்ந்து பேசினார்கள் என்ன மாதிரி கேம் அண்ணாமலை இன்று PLAY பண்ணுகிறார் பாருங்க :: TTV போர்க்கொடி OPS சசிகலா ஒரு புள்ளியில் இன்று ஆக அண்ணாமலையை தூக்க வைத்த எடபடிக்கு அண்ணாமலை கொடுக்கும் தலைவலி தான் , செங்கோட்டையன் எப்போ எல்லாம் நிம்மி வருகிறார்களோ அப்போ பிரச்சைன செய்கிறார் , இதை தான் தீர்வு ஏற்படுத்துவது அக்கறை இல்லை எடபடியிடம் என்கிறார் சிரிப்பு POLICE


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 21:01

அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பத்தாண்டுகளாக எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்று இதுவரை தெரியவில்லை. உமக்கு தெரியுமா அண்ணா மலே?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 20:56

பொய் பேசி குழப்பங்களை செய்வதில் அண்ணாமலை முதல்ஆள்


Narayanan Muthu
செப் 02, 2025 19:11

ஊடக வெளிச்சம் இல்லாமல் உயிர் வாழ முடியாத ஒரு நோய் தாக்கம்தான் இது போல் இவரை பேச வைக்கிறது.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 19:05

அதுதான் எடுபுடி தீர்வு உனக்கு கண்டு விட்டாரே , இப்போ உங்களது ADMK மீட்டிங் என்னவோ DEVORCE ஆனவர்கள் அமர்ந்து இருந்த மாதிரி .நீங்க எடப்பாடி சைடு,அவர் உங்க சைடு பார்க்கவில்லை,இதெற்கெல்லாம் தீர்வு காண பாருங்க , எப்படியும் நீங்க எடபடிக்கு ஆதரவா , உங்களுக்கு ஆதரவா எடப்பாடி வேலை செய்ய போவதில்லை அப்புறம் என்ன இந்த தேர்தல் DMK க்கு CAKE WALK தான்


தியாகு
செப் 02, 2025 18:23

அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்டவேண்டியது, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் எடுபடாமல் போனதும் அண்ணாமலையை மையப்படுத்தி மட்டும் செய்திகள் போடவேண்டியது. அண்ணாமலையை தமிழக பாஜகவில் ஊறுகாய் போல மட்டும் பயன்படுத்த நினைக்கும் கும்பல் இருக்கும்வரையில் தமிழக பாஜக ஒரு சீட்டு கூட தேறாது. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 20:55

இல்லைன்னாலும் பாஜகவுக்கு ஒண்ணும் தேராது. அது ஒனக்கு புரியாத வரை அண்ணாமலை இப்படி கூவிக்கிட்டே தான் இருப்பார்.


Priyan Vadanad
செப் 02, 2025 16:57

தலைவர் பெயரில் அண்ணா இருப்பதால் அவர் அண்ணா உருவாக்கிய திமுகவில் சேர்ந்து திமுக அரசின் செயல்பாடுகளை இன்னும் சிறப்புடன் செயல்படுத்தலாம். அவருக்கு சிறப்பான வரவேற்பு உண்டு. திமுக செயல்பாடு குறித்து அவர் அதிகம் விமர்சிப்பதால், அவருக்கு திமுக அரசின்மேல் பாசம் அதிகமாகி வருகிறதோ என்கிற சந்தேகம் varukirathu.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 21:04

அண்ணா பாஜக என்று ஒரு கட்சியை ஆரம்பித்து கலக்கலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 02, 2025 16:27

அண்ணாமலை அரசியல் கருத்துகள் சொல்ல அவருக்கு பூரண உரிமையுண்டு. ஆனால் அவர் எந்த மேடையில் இருந்து பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பாஜக கட்சி தலைவராக ஒருவர் இருக்கிறார், கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் எந்த பொறுப்பிலும் இல்லாமல் "முன்னாள் தலைவர்" என்ற பெயரில் அண்ணாமலை அரசியல் பேசுவதுதான் புரியாத புதிராக இருக்கிறது.


T.sthivinayagam
செப் 02, 2025 17:09

சுயநல ஊடகங்களின் ஊறுகாயாக மாற்றி கொண்டு உள்ளனர்


vivek
செப் 02, 2025 17:38

நல்லதை யாரும் பேசலாம்...சிலருக்கு அதை கேட்க அருகதை இல்லையே


Chandru
செப் 02, 2025 20:39

சில்லறை கனமாக இருப்பது போல் தெரியும். ஆனால் மதிப்பு கிடையாது.. அப்படிதான் 200 ருபாய் ஊபிஸ்க்கள்


சமீபத்திய செய்தி