காங்கிரசின் பல்ஸ் பார்த்த பின் தி.மு.க.,வில் குழு!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'வரும் 22ம் தேதி முதல் தி.மு.க., குழு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சை துவங்கும்' என தி.மு.க., அறிவித்தது. ஆனால், தொகுதி பங்கீடு பேச்சு குழுவை அமைக்கவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், குழு அமைத்து பேசினால், த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்காது என தி.மு.க., கருதுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=engfih3f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையில், ஜனநாயகன் படத்தை இன்னும் இரண்டு வாரத்திற்குள் திரையிட, பா.ஜ., உதவ முன்வந்துள்ளது. அதற்கு பரிகாரமாக, காங்கிரஸ் கட்சியை த.வெ.க., கூட்டணியில் சேர்க்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரசுக்கு த.வெ.க., தரப்பில் இருந்து கதவு அடைக்கப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த பிறகே, தி.மு.க., தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.