உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை தடையின்றி கிடைக்கும் போதை பொருட்களால் சீரழித்து, காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.வடமாநில இளைஞரை போதை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ பகிர்ந்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணியில் பணிபுரியும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சூரஜ், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். மற்றவர்கள் சமூக ஊடகத்தில் ரீல் பதிவு செய்வதற்காக அவரது கழுத்தில் கத்தியை வைத்தபோது, ​​அதைத் தட்டிக் கேட்ட காரணதால் தாக்கப்பட்டு இருக்கிறார்.இதுதான் இன்று திமுக ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின் கவலைக்குரிய யதார்த்தம். போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தாலும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரசாரம் மற்றும் கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது.கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை, தடையின்றி கிடைக்கும் போதை பொருட்களால் சீரழித்து காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது திமுக அரசு. காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாக மாற்றியதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

சிட்டுக்குருவி
டிச 29, 2025 19:48

அரசு சாராயம் விற்பது அரசுகளின் மதியின்மையே காரணம் .மக்களுக்கு நல்வாழ்வு அமைத்திட வழிவகுக்க வேண்டிய அரசுகள் தங்களின் சுய லஞ்ச லாபத்திற்காகவும் தங்களின் சாராயம் ஆலைகளின் வருமானத்தை பெருக்கவும் வேண்டி ஏழைக்குடும்பங்களை சீரழித்துவிட்டார்கள் .


கத்தரிக்காய் வியாபாரி
டிச 29, 2025 16:58

திராவிட மாடல் ல என்னதை எதிர்பார்க்க முடியும்


Ms Mahadevan Mahadevan
டிச 29, 2025 16:09

என்னமோ இவர் கட்சி யம் கூட்டணி கட்சிகள் யோக்கிய மான ஆச்சி செய்வதாக கூறி ஏமாற்றுகிறார்


vivek
டிச 29, 2025 22:13

அரைவேக்காடு கொத்தடிமை


ராஜா
டிச 29, 2025 16:04

அண்ணா பாட்டுக்கு எதையாவது வள வள என்று சொல்லி விட்டு போய் விடுவார்.


P. SRINIVASAN
டிச 29, 2025 16:04

DMK காட்டாச்சிய மாறிடுச்சா தெரியல,


vivek
டிச 29, 2025 22:12

டாஸ்மாக் சீனுவுக்கு எதுவுமே தெரியாது


ஆரூர் ரங்
டிச 29, 2025 15:49

இவர்கள் விடுதலையான பின் ஜெயகடா பேட்டறிவானுக்கு செய்ததது போல கட்டிப்பிடித்து விருந்தளித்து மகிழ்வார்?.


பாலாஜி
டிச 29, 2025 15:45

பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக பாஜக நரேந்திரமோடியின் ஆட்சி, அமித்ஷாவின் ஆட்சி இந்தியாவில் மத்திய அரசில் நடைபெறும் கொடுமை முடிவுக்கு வரவேண்டும் அண்ணாமலை.


vivek
டிச 29, 2025 22:14

சொம்பு பாலாஜி என்று உன்னை அழைப்பது சரியே


Vijay
டிச 29, 2025 15:38

2026ல் திமுக ஆட்சிக்கு வருவது குற்றவாளிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை வரும்.


arumugam mathavan
டிச 29, 2025 14:58

காட்டாட்ச்சி, நீதியை மதிப்பதில்லை, கட்சி தொண்டர்கள் மக்களை மதிப்பதில்லை, பெண்கள் , குழந்தைகள் பாலியில் இல்லாத நாளே இல்லை.. போதையில் விபத்தில் அப்பாவிகள், இளைஞர்கள் இறக்கிறார்கள்.....எங்கே போகிறது.... 2026 முடிவுக்கு வர எதிர்கட்சிகள் இனைந்து பாடுபட வேண்டும்


Madras Madra
டிச 29, 2025 14:55

நம்ம கழுத்துல கத்தி விழுகுற வரைக்கும் தூங்குவான் தமிழன்


முக்கிய வீடியோ