உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: அன்புமணி

சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: ''சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. ஒரு ஓட்டுக் கூட தி.மு.க.,விற்கு விழக்கூடாது'' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தாததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது: எத்தனை முறை நானும், ஐயாவும் பார்த்தோம். நிச்சயமாக நான் செய்கிறேன் என்று பொய்யைச் சொன்னார். இந்த தேர்தலில் பார்க்கத்தான் போகிறோம். நாங்கள் புள்ளைக்கு படிப்பும், வேலையும் கேட்டோம். பீஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துவிட்டார்கள். முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் அதிகாரம் இல்லையா? இந்திய புள்ளி விவர சட்டத்தின் படி, பஞ்சாயத்து தலைவருக்கு அவரது பஞ்சாயத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. உங்களுக்கு கிடையாதா? எவ்வளவு காலம் பொய் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. ஒரு ஓட்டுக் கூட தி.மு.க.,விற்கு விழக்கூடாது. தி.மு.க.,விற்கும், சமூகநீதிக்கும் சம்பந்தம் இல்லை. காந்தி 32 ஆண்டுகளில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. ராமதாஸ் 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. நம்மை அடிமையாக வைத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V RAMASWAMY
ஜூலை 21, 2025 09:45

சமத்துவம், சமூக நீதி, மாடல் அரசு, திராவிடம், மொழி வெறி, சாதி அரசியல் இவையெல்லாம் மக்கள் கவனத்தை திசை மாற்றி திரும்ப திரும்பி சொல்லி மூளை சலவை செய்து அவர்கள் எதற்காக பதவி வகிக்க வந்தார்களோ அதை செய்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். நல்லவர்களை பதவியேற்றினால் நன்மை நலம் கிடைக்கும், எங்கும் வளம் பெருகும், 2026 வருகிறது, செய்யுங்கள், வாக்காளர்களே.


V Venkatachalam
ஜூலை 20, 2025 19:43

அன்பு மணி முதுகு நமக்கு தெரியுது. ஆனா அன்பு மணிக்கு தெரியலை. தீயமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச யோக்கியதை இல்லை என்பது சரிதான். மரம் வெட்டி ராமுதாஸு பையனுக்கு இருக்கா? ராமுதாஸுக்கு அடுத்த படி கட்சியை பாத்துக்க கட்சியில் இருந்து ஒருத்தனை உட்கார வைக்கலீயே .அப்பறம் என்ன பெரீய்ய சமூக நீதி..


Raja k
ஜூலை 20, 2025 19:32

சரிங்க அப்பா ரூம்குள்ள ஒட்டு கேட்குற கருவியை வச்சது யாரு அதை சொல்லுங்க, அதை பத்தி வாயே திறக்க மாட்டிடேங்குறீங்க


Kulandai kannan
ஜூலை 20, 2025 18:21

ஊன்றுகோல் இல்லாமல் போராடும் மனதைரியத்தை உங்கள் சமூகத்திற்கு ஊட்டுங்கள் அன்புமணி அவர்களே


V RAMASWAMY
ஜூலை 20, 2025 17:51

வேறு ஏதாவது பற்றியாவது பேச தகுதி?


T.sthivinayagam
ஜூலை 20, 2025 17:46

பாட்டாளி மக்கள கட்சி என கட்சி பெயர் வைத்து கொண்டு வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கேட்பது எந்த வகை சமுக நீதி அன்பு மணி அவர்களே பாட்டாளிகள் கேட்கின்றனர்


GMM
ஜூலை 20, 2025 15:55

சமூக நீதி காக்க அரசு கூறும் உட்பிரிவில் மட்டும் திருமணம் செய்ய வேண்டும். கலப்பு மணம், மதம் மாற முடியாது. சாதி வாரி இட ஒதுக்கீடு சமூக நீதி ஆகாது. கட்டாய குறைந்த வரி அல்லது சட்ட பேரவை ஓட்டுரிமை நீக்கம். வன்னியர் போன்ற அதிக சாதி மக்கள் தன் தேவையை தானே பூர்த்தி செய்ய முடியும். இவர்களுக்கு அடிப்படை கல்வி மட்டும் இலவசமாக போதிக்க வேண்டும். உயர் கல்வி, மருத்துவம், நீதி அனைத்தும் கட்டண அடிப்படையில் வசூலிக்க வேண்டும்.


T.sthivinayagam
ஜூலை 20, 2025 15:27

யார் யாருக்கு தகுதி இருக்கிறது என்று அன்பு மணி தெளிவாக சொல்ல வேண்டியது அவசியம்


J.Isaac
ஜூலை 20, 2025 15:12

சமூக நீதி பற்றி பேச யாருக்குமே தகுதி கிடையாது


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஜூலை 20, 2025 14:33

பொட்டி மணி பெரியவரை யாரு ஓட்டு கேட்பு கருவி வைத்து ஓட்டு கேட்டது அத சொல்லு


Jack
ஜூலை 20, 2025 16:10

ஒட்டுகேக்க வெச்சது இல்ல பாக்க வெச்சாங்களா


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 16:21

அதை உங்க அப்பாவை சொல்லச் சொல்லுய்யா


சமீபத்திய செய்தி