உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேனியில் தி.மு.க.,கோஷ்டி பூசல் எம்.பி., பிறந்த நாள் பேனர் கிழிப்பு

தேனியில் தி.மு.க.,கோஷ்டி பூசல் எம்.பி., பிறந்த நாள் பேனர் கிழிப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்ட தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசலால், எம். பி., தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன. தி.மு.க., -எம்.பி., தங்க தமிழ்ச்செல்வனுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்திருந்தனர். அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் படங்களுடன் தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் படமும் இருந்தது. இந்த பேனர்களை, நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். இதனால், தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது ஆதரவு தி.மு.க., நிர்வாகி மறவபட்டி மகாராஜன் அளித்த புகாரின் பேரில், ஆண்டிப்பட்டி போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர். இரு மாதங்களுக்கு முன், தங்க தமிழ்ச் செல்வனும், ஆண்டிப்பட்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., மகாராஜனும், அரசு விழா மேடையிலேயே ஒருவரை ஒருவர் 'முட்டாள்' என திட்டினர். இந்த சூழலில், தங்க தமிழ்ச்செல்வன் பிறந்த நாள் விழா பேனர்கள் கிழிக்கப்பட்டது, தி.மு.க., வில், கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதை காட்டுவதாக அக்கட்சியினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
அக் 03, 2025 10:15

முட்டாள்ன்னு உண்மையை சொன்னதுக்காக இப்படி பேனரைக் கிழிக்கலாமுங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை