உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ‘மாஜி’ எம்.எல்.ஏ., சரண்

தி.மு.க., ‘மாஜி’ எம்.எல்.ஏ., சரண்

இந்த, 100 கோடி ரூபாய் லஞ்ச வழக்கில், முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள, விருத்தாச்சலம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், தலைமறைவாக இருந்து வந்தார். அவரது முன்ஜாமின் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று (அக்.,28) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முத்துக்குமாரை கைது செய்ய, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினர். இன்று (அக்.,29) சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், அவர் சரண் அடைந்தார். அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முத்துக்குமாரின் வருமான வரி விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், அவர் முன்னாள் எம்.எல்.ஏ., என்பதால், சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிபதி சத்தியமூர்த்தி, நவ.,12 வரை முத்துக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், முத்துக்குமாருக்கு, சிறையில் முதல் வகுப்பு பிரிவு வழங்குவதோடு, தேவையான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யவும், அவரது சொந்த ஆடைகளை பயன்படுத்தவும் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மகேஷை மீண்டும் சந்தித்த உதயநிதி

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, இரண்டாவது முறையாக இன்று சந்தித்துப் பேசினார்.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவது தொடர்பான, 100 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க.,வை சேர்ந்த பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் மகேஷ், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி, கடந்த, 27ம் தேதி, சிறையில் அவரை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று காலை, இரண்டாவது முறையாக புழல் சிறைக்கு சென்று, மகேஷை உதயநிதி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை