உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச பேச்சாளர் பொன்முடி; இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் தி.மு.க., அரசுக்கு தான் கெட்ட பெயர்!

ஆபாச பேச்சாளர் பொன்முடி; இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் தி.மு.க., அரசுக்கு தான் கெட்ட பெயர்!

சென்னை: பெண்களைப் பற்றி அச்சில் ஏற்ற முடியாத வகையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b6nin9f3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போதைய தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சு அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.நாராச நடையில் ஆபாசமாக அமைச்சர் பேசியதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சரின் ஆபாச பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' என குறிப்பிட்டுள்ளார்.

பதவி பறிப்பு

பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை (துணை பொதுச்செயலாளர்) பறித்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பதவி பறிப்பு அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகும்;ஆனால் இன்றைய பதவி பறிப்பு அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியாகியுள்ளது. இது தி.மு.க., தலைமைக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக கட்சி நிர்வாகிகளும், நெட்டிசன்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.நெட்டிசன்கள் கண்டனம்நெட்டிசன்கள் பலரும் அமைச்சருக்கும், தி.மு.க.,வுக்கும் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் பலரும், அமைச்சர் பதவியை பொன்முடியிடம் இருந்து பறிக்க வேண்டும் என்றும், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.இதற்கிடையே, அவரது அமைச்சர் பதவி விரைவில் பறிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.திருச்சி சிவா நியமனம்பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவி, கட்சியின் ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கண்டனம்

இது குறித்து, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. பொறுப்பற்ற இந்த பேச்சுக்காக அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 318 )

sethusubramaniam
மே 11, 2025 21:13

ஐயோ பாவம் , நெட்டிசன்கள் . ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டவர் என்று நினைத்துக்கொண்டு கருத்து பதிவிடுகிறார்கள். ஆர்.எஸ் பாரதியை இது வரை கண்டிக்கவில்லை. ராஜ. கண்ணப்பனை கண்டிக்கவில்லை. பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவில்லை. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க உச்ச நீதிமன்றம் கெடு வைத்தபின்தான் அவர் ராஜினாமா செய்தார்.துரை முருகனையும் , கதிர் ஆனந்தையும் கண்டிக்கவில்லை. ஒருவரையும் பகைத்துக்கொள்ளும் தைரியம் ஸ்டாலினுக்கு துளியும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இரும்புக்கரம்னு உதார் விட மட்டுமே முடியும் .


Md.Syed
மே 06, 2025 14:33

நீதிமன்றம் தானாகவே இந்த பேச்சை குறித்து அமைச்சரிடம் விளக்கம் கேட்கவேண்டும். எதிர்காலத்தில் பதவியில் உள்ள மந்திரிகள் கேவலமாக பேச மாட்டார்கள்


Swaminathan Nath
ஏப் 17, 2025 10:24

DMK பெண்களை மதிக்காத கட்சி, பாலியல் வன்கொடுமையை தூண்டி விடும் படி பேசும் அமைச்சர் பதவி விலக வேண்டுமா என்பதை அரசு முடிவு செய்யட்டும். தவறான சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பும் இந்த கட்சியை அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். இது போல பேச மேடை அமைப்பு தந்த அந்த இயக்கத்தை குறைந்த பட்சம் 100 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும்.


S.V.Srinivasan
ஏப் 16, 2025 07:38

இப்போ மட்டும் திராவிட மாடலுக்கு நல்ல பேரா இருக்கு. நஹி.


Ramesh Sargam
ஏப் 14, 2025 13:29

திமுக அரசுக்கு என்றைக்கு நல்ல பெயர் இருந்தது?।


தமிழன்
ஏப் 14, 2025 01:08

பாலியல் வன்கொடுமையை தூண்டி விடும் படி பேசும் அமைச்சர் பதவி விலக வேண்டுமா என்பதை அரசு முடிவு செய்யட்டும். தவறான சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பும் இந்த கட்சியை அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும். இது போல பேச மேடை அமைப்பு தந்த அந்த இயக்கத்தை குறைந்த பட்சம் 100 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும்.


Raghavan
ஏப் 13, 2025 21:22

மூஞ்சியில் சேத்தை வாரி அடித்தவன் மீது எந்த தவறும் இல்லை . சேத்தைவாரி அடித்தும் இவனுக்கு புத்தி வரவில்லை?


Suppan
ஏப் 13, 2025 21:14

அதெல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள். கடைசியில் திமுக காரனா என்றும் கேட்கப்பட்டிருக்கவேண்டும். ஆதாரம் வனவாசம் , இருக்கும் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு மிரட்டுபவன் .


மூர்க்கன்
ஏப் 14, 2025 16:27

அந்த வனவாசம் பெரியார் பக்தர்களையும் அண்ணாவின் நா வன்மையையும் கலைஞரின் நட்பையும் பெருமை படுத்தியே பேசியுள்ளது ?? சும்மா வனவாசம் வனவாசம் என பூச்சாண்டி காட்ட வேண்டாம் சுப்பா ?? இன்னும் காம ராசு தூண்டுதலில் எழுதியது வெறும் நகைக்சுவை ?? மட்டுமே ?? மண வாசம் அவருக்கு காங்கிரஸில் கிட்ட வில்லை சிவகாமி மகன் பதில் சேதி சொல்லவுமில்லை ...


B N VISWANATHAN
ஏப் 13, 2025 21:09

படிச்ச அமைச்சர் பேச்சுக்கு எல்லாரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். ஆனா T V K நிறுவனர் ஒன்னும் சொல்லலை .


தமிழன்
ஏப் 14, 2025 01:09

அவர் பெரியாரை ஆதரிக்கிறார்.. இந்தத் கட்சியை தேர்தல் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.


Kishore Bengaluru
ஏப் 13, 2025 21:08

Thanks ponmudi. your helping to NDA Alliance.


புதிய வீடியோ