உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் “மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்” என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல். https://www.youtube.com/embed/TjQVA_s5ogUதனது அரசுப் பதவியின் மாண்பினை மறந்துவிட்டு இதுபோன்ற கேலி, கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. “ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” எனக் கூறிய திமுக, அரியணையில் அமர்ந்ததும் “தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை” எனப் பாதிப் பெண்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது “நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது” எனக் கூறி மீதி பெண்களையும் விரட்டப் பார்க்கிறது. திமுக அரசிடம் மகளிர் உரிமைத் தொகை வாங்க வேண்டுமென்றால் பெண்கள் தங்களிடமிருக்கும் ஆபரணங்களைக் கூட அணியக் கூடாதா? எப்பேற்பட்ட மேட்டிமைத்தனமான எண்ணமிது?பஸ்சில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களை “ஓசி” எனவும், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களை “ரூ.1000ல் கிரீம், பவுடர்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க” எனவும், உரிமைத் தொகை வரவில்லை என முறையிடும் பெண்களை “மெண்டல்கள்” எனவும் நாக்கில் நரம்பின்றி வசைபாடும் திமுகவினர், நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டுவதையும், உருவக்கேலி செய்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?எனவே, திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இனியும் இதுபோன்ற விமர்சனங்களைத் திமுக தலைவர்கள் தவிர்ப்பதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamilan
ஆக 22, 2025 17:37

அன்பு, பண்பு பாசம் என்றால் என்ன என்றே தெரியாத காட்டுமிராண்டிகள் இந்து மதவாத கும்பல்


Tamilan
ஆக 22, 2025 17:35

அரசியல் நாகரீகத்தைப்பற்றி மதவாத காட்டுமிராண்டிகள் கூறவேண்டியதில்லை


சாமானியன்
ஆக 22, 2025 13:45

திமுகவை சேர்ந்த நாங்கள் பெண்களாகிய தங்களை எப்படி வேண்டுமென்றாலும் கேலி, கிண்டல் பண்ணுவோம். தேர்தல் நாளன்று மறக்காம திமுகவிற்கு மட்டுமே ஓட் போட்டுறுங்க. இப்ப பேசறதெல்லாம் சும்மா டைம் பாஸ், ஃபன், காமெடி. உங்கட்கு சொரனை இருக்காது என எங்க திராவிட மாடலுக்கு தெரியுமே.


முக்கிய வீடியோ