உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., – எம்.பி.,க்களுக்கு உத்தரவு

தி.மு.க., – எம்.பி.,க்களுக்கு உத்தரவு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக, சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம், தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இரவு டில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தி.மு.க., – எம்.பி.,க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு., ஆ.ராஜா, தயாநிதி உள்ளிட்டோர் சந்தித்து, தங்களின் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தனர். மேலும், கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., விவகாரம், த.வெ.க., அரசுக்கு சட்ட ரீதியாக நெருக்கடி தருவது, 2029 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது, மத்திய அமைச்சரவையில் தி.மு.க., இடம் பெறுவது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை, ‘இண்டி’ கூட்டணி தலைவர்கள், ஸ்டாலினை சந்திக்க வர உள்ள தகவல் வெளியானதும், ஸ்டாலின் வீட்டில் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எம்.பி.,க்கள் சிவா, என்.ஆர்.இளங்கோ, வில்சன், கலாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘தமிழகத்தின் தற்போதைய 7.23 சதவீதம் பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. இதை, பார்லிமென்டில் வலியுறுத்தி பேச வேண்டும். அனைத்து எம்.பி.,க்களும் தவறாமல் சபையில் இருக்க வேண்டும்’ என, தெரிவித்ததாக தகவல் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ