உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., புதிய உத்தரவு

எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., புதிய உத்தரவு

- நமது நிருபர் - தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது: சட்டசபை கூட்டத்தொடரில், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து, த.வெ.க., அமைச்சர்களிடம் தி.மு.க., - - எம்.எல்.ஏ.,க்கள் விவாதிக்க வேண்டும். ஆனால், த.வெ.க., அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். கலெக்டர்கள் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று, தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை கவனியுங்கள். இன்னும் ஆறு மாத காலத்திற்கு தான், த.வெ.க., ஆட்சி நடக்கும். அதன் பின், நம்முடைய ஆட்சி தான் நடக்கும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Ragupathy
ஜூன் 19, 2026 22:48

திருட்டு கழகங்கள் அழிவது தமிழகத்திற்கு நல்லது...


manian
ஜூன் 19, 2026 18:27

see the confidence of this man.he dreams of CM chair after 7 months.dmk is desperate and spends sleepless nights.TVK beware plans are being hatched.


venugopal, s
ஜூன் 19, 2026 18:23

அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல் உருவப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை...எங்கோ படித்ததில் பிடித்தது


theruvasagan
ஜூன் 19, 2026 16:34

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போய்விடுமா. உள்ளேயும் சரி வெளியேயும் சரி. பேசுங்க. பேசாம போங்க. கேளுங்க. கேட்காம போங்க. நீங்க ஒரு கேள்வி கேட்டால் உங்களை கழுவி ஊத்த ஓராயிரம் பேர் காத்துக்கொண்டு இருக்காங்க. வாயை கொடுத்தால் வாங்கிக் கட்டிப்பீங்க. அமைதியாக போவது கவுரவம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 19, 2026 13:22

திருட்டு திராவிடம் ஒழிந்தது. இனி வயசுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன?


Natarajan Ramanathan
ஜூன் 19, 2026 11:41

வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு ஒரு தோற்றுப்போன எம்எல்ஏ உத்தரவுபோட முடியுமா?


பிரேம்ஜி
ஜூன் 19, 2026 12:54

திராவிட எம் எல் ஏ க்கள் எல்லாம் திராவிட முதலாளிக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்! கொத்தடிமைகள் சுதந்திரமாக எப்படி இருக்க முடியும்?


Vasan
ஜூன் 19, 2026 15:26

திரு.ஸ்டாலின் அவர்கள், திமுகவினருக்கு அரசியல் ஆலோசகர். அவர் சொல்லியது ஆலோசனை என்று கருதுங்கள்.


kmathivanan
ஜூன் 19, 2026 11:31

திமுக இன்னும் படுதோல்வி அடையபோகிறது . புதியவர்களை பார்க்க பொறுக்கவில்லை வயிறு எரியுது . தாங்கள் மட்டும் மட்டுமே எதுவும் செய்யாமல் தமிழ் , தராவிடம் , சமூகநீதி என்று பொய்பேசி தங்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பது பதவியை வைத்துகொள்வது


krishna
ஜூன் 19, 2026 10:17

இது இல்ல ....


duruvasar
ஜூன் 19, 2026 10:03

குப்புற படுத்து குமிறினாலும் சரி , மொட்டை மாடியில் மண்டை காய கத்தினாலும் சரி, தெருக்களில் பித்து பிடித்தவன்போல் பிதற்றினாலும் சரி, ஐயா திமுக இனி எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது.


ramesh
ஜூன் 19, 2026 10:00

ஸ்டாலின் கதறுகிறார் என்று கருத்துப்போடும் கூட்டம்தான் 50 நாட்கள் முன்பு வரை ஜோசப் விஜய் கிறிஸ்தவன் என்று கிண்டல் அடித்தது . இப்போது என்ன புது பாசம் வந்து விட்டது. தேர்தலில் 1 தொகுதியில் மட்டும் வென்றாலும் ஏன் இப்படி படு தோல்வி அடைந்தோம் என்று சிந்தித்து பாருங்கள் .இப்படி பேசி பேசி தான் வெறுப்பை சம்பாதித்து 1 தொகுதிக்குள் அடங்கி போனீர்கள் . தோல்வி அடைந்த DMK கூட கூட்டணியாக 73 தொகுதி கை பற்றியது இது ஆளும் கட்சியை விட 35 தொகுதி மட்டுமே குறைவு


duruvasar
ஜூன் 19, 2026 11:11

ஐயா இன்னும் நாங்க கூட்டணி வைத்து அந்த காலத்தில்... ......... இந்த பேச்சை விடுங்கள். கட்சி ஆரம்பித்த நாள் முதல் கூட்டணி கட்சிகளின் முதுகில் ஏறி ஜெய்து காட்டிய வீறாப்புகளை விட்டுவிட்டு தனியா நின்று 1 லாவது ஜெயிக்க முடியுமான்னு யோசியிங்க. அது போக திமுக பார்வையில் தேர்தலுக்கு முன் விஜய் யாரு இப்ப அவரு யாரு ? அவரு பெயாlரை சொல்லவே நடுக்கிறீங்க.


theruvasagan
ஜூன் 19, 2026 12:51

அவங்க ஜெயித்த இடங்கள் கூட்டணி கட்சிகளின் உபயம். தனியாக நின்றிருந்தால் டெபாசிட்டை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட்டிருக்கும். வரப்போகிற இடைத்தேர்தலில் நிற்க தைரியம் இல்லாமல்தானே பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்கிற சால்ஜாப்பு.


ramesh
ஜூன் 19, 2026 13:26

கடைசி அறையில் வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்ற மழுப்பல் பேசி . அடுத்த கட்சியை கிண்டல் அடிப்பதை விட்டு விட்டு உங்கள் முதுகை திரும்பி பார்த்தால் தான் கொஞ்சமாவது உருப்படும் . இல்லை என்றால் 4 இல் இருந்து 1 ஆனது அதற்க்கு பிறகு என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும்


venugopal, s
ஜூன் 19, 2026 16:09

ரமேஷ் தான் ஒரு ups, கொத்தூஸ் அப்டின்னு நிரூபித்தார்


krish
ஜூன் 19, 2026 16:52

ரமேஷின் அலுமினிய தட்டில் இன்று இருநூறு விழுந்தது....அதனால் இந்த முட்டு


ஆகுயர்தான்
ஜூன் 19, 2026 18:22

ரமேஷ் kothoos...மே வங்கத்தில் இப்படிதான் ஒரே ஒரு சீட். இப்போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை. போய் வீட்ல பெருசு யாராச்சும் இருந்தா வர சொல்லு


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஜூன் 19, 2026 18:45

TVK ஜெயித்தது எங்களுக்கு பெரிதல்ல. திமுகவின் படுதோல்விக்கு தான் நாங்க ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். புரிந்து கொள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை