உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க. மாஜி அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்

தி.மு.க. மாஜி அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆலங்குடி சுப்பையாவின் சமாதி உள்ள இடத்தை, வீட்டு மனை பட்டாவாக வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கரும்பிரான்கோட்டையை சேர்ந்தவர் சுப்பையா. இவர் 1967 சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் ஆலங்குடியில் வெற்றி பெற்றவர். 1969ல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற போது, ஆலங்குடி சுப்பையா, அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். சென்னையில் அண்ணாநகரை உருவாக்கியது, துவரங்குறிச்சியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்தது, திருவாரூர் கோவில் தேரை மீண்டும் ஓடச் செய்தது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்தது உள்ளிட்ட சாதனைகளை செய்தவர். இருமுறை ஆலங்குடி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் 1976ல் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடல், சொந்த ஊரான, கரும்பிரான்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் புறம்போக்கு இடத்தில் புதைக்கப்பட்டு, சமாதி கட்டப்பட்டது. காலப்போக்கில் இந்த சமாதி சிதிலமடைந்தது. இதை சீரமைக்க சில நாட்களுக்கு முன், சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றனர். அப்போது அங்கு வந்தஒருவர், சமாதி உள்ள இடத்தில், அதிகாரிகள் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., ஐஸ்வர்யா, ஆலங் குடி தாசில்தார் வில்லியம்ஆகியோரிடம் புகார் அளித்தனர். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதையறிந்தபுதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.,வினர் மற்றும் ஆலங்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

NATARAJAN R
அக் 04, 2025 14:23

இது ஏதோ ஒரு இடம் மட்டும் என்று நினைத்து கொண்டு போக கூடாது. இது போல் பல. அவ்வப்போது ஒன்று இரண்டு வெளிவரும்.கொஞ்சம் கவனம் குறைவாக இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் பெரிய கோவில் என எதையும் பட்டா மாறுதல் செய்து தருவார்கள். ஒரு உதாரணம். அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கு புகழ் ஞான சேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை யில் மாடி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இவர் ஆக்ரமிப்பு செய்த நிலம். இவர் பெயரில் மின் இணைப்பு, தண்ணீர், சொத்து வரி, கட்டிடம் கட்ட அனுமதி, என எல்லாம் அவன் பெயரில். எல்லா அனுமதியும் தமிழ்நாடு அரசு வழங்கியது. இவர் கைது செய்யப்பட்டவடன் ஒரு செய்தி வந்தது. ஆம் இவர் வீடு கட்டி இருப்பது அவர் பணம் கொடுத்து வாங்கிய நிலம் அல்ல. அதை வாங்கவும் சட்டம் அனுமதி தரமுடியாது. காரணம். அவன் ஆக்ரமிப்பு செய்து வீடு கட்டி வாழ்ந்து வந்தது சென்னையில் அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம். பிரச்சினை வெளிவந்த உடன் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், வருவாய் கோட்ட அலுவலர், அறநிலையத்துறை நிர்வாகம் என்று ஒரு கூட்டம் சென்று வீட்டை அளந்து இடம் மீட்கப்பட்டது. இதுதான் இவர்கள் தமிழ் நாட்டில் ஆளும் லட்சணம்


ram
அக் 04, 2025 12:26

திமுக அரசு சார்பாக மக்கள் வரி பணத்தில் அங்கு நூறு கோடிக்கு அந்த மாஜி அமைச்சருக்கு சமாதி கட்டப்படும்.


Ramesh Sargam
அக் 04, 2025 11:23

தீவிரமாக விசாரிச்சா சென்னை மரீனா கடற்கரையில் உள்ள அரசியல் தலைவர்களின் சமாதி இருக்கும் இடமெல்லாம் கூட யாருக்காவது பட்டா போட்டு கொடுத்திருப்பது தெரியவரும்.


Rathna
அக் 04, 2025 10:59

கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டால் செவ்வாய்யிலேயே பட்டா போட்டு குடுப்போம்ல


Barakat Ali
அக் 04, 2025 10:47

ஒவ்வொண்ணும் காமெடிதான் .....


Yasar Arafat Yasar Arafat
அக் 04, 2025 10:18

வரவேற்க்கதக்கது.


SRIDHAAR.R
அக் 04, 2025 08:42

அதிகாரிகள் செய்து உள்ள நல்ல காரியம்


G Mahalingam
அக் 04, 2025 08:35

பறம் போக்கு இடத்தில் சமாதி கட்டப்பட்டது என்று தெளிவாக இருக்கு. அப்போது இலவச பட்டா கொடுத்தது சரிதான்.


VENKATASUBRAMANIAN
அக் 04, 2025 08:19

திராவிட மாடல் ஆட்சியில் சட்டசபைக்கே பட்டா போட்டு விற்று விடுவார்கள்


திகழ் ஓவியன்
அக் 04, 2025 07:59

இருக்கும் வரை ஒன்றும் நடக்காது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை