உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., போராட்டத்திற்கு மட்டும் அனுமதியா? போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜ., பா.ம.க., வழக்கு

தி.மு.க., போராட்டத்திற்கு மட்டும் அனுமதியா? போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜ., பா.ம.க., வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல், கவர்னருக்கு எதிரான தி.மு.க.,வின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி சென்னை போலீஸ் கமிஷனர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க., பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேநேரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அனுமதியின்றி கூடியதாக அக்கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்தது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் துவங்கி உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oy8taz1g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஆளுங்கட்சி போராட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ம.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.மேலும் பா.ஜ., சார்பிலும் போலீஸ் கமிஷனருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் போலீஸ் கமிஷனர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

கேள்வி

இந்நிலையில், பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ' பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்தது ஏன்? கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்,' என கேள்வி எழுப்பி விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kanns
ஜன 09, 2025 13:30

All PowerMisusers Survive Just Because of Failed, CaseHungry, AdvocateBiased CourtJudges. Major PowerMisusers are RulingPartyGovts, their Stooge Officials esp Investigators-Police-Magistrates-Bureaucrat, NewsHungry BiasedMedia, Vested Groups like VoteHungry Parties& FalseComplaint Gangs esp Women, SCs, Unions/Groups, advocates etc. SHAMEFUL JUSTICE


Ramesh Sargam
ஜன 08, 2025 22:18

திமுக போராட்டத்தில் ரூ. இருநூறு, பிரியாணி, சரக்கு கொடுப்பார்கள். நீங்கள் அதுபோல் கொடுத்தால் உங்களுக்கும் அனுமதி கிடைக்கும்.


Raj S
ஜன 08, 2025 20:55

நீதி மன்றத்துல இருக்கறவங்க எல்லாம் திருட்டு திராவிட கை கூலி... அவங்களிடம் நல்ல தீர்ப்பை எதிர் பார்க்க முடியாது... ஒத்திவைப்பு தான் நடக்கும்...


Kasimani Baskaran
ஜன 08, 2025 20:50

அரசியல் அமைப்பு சட்டம் சம்பந்தப்பட்ட விதி மீறல்களை கையாள நிரந்தரமாக தனி பெஞ்ச் ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் தமிழக உயர் நீதிமன்றமே போராட உரிமை இல்லை என்று சொன்னது போல நினைவு..


சம்பா
ஜன 08, 2025 19:16

நல்ல செயல் அ.தி.மு.காவும் தாக்கல் செய்யனும்


பேசும் தமிழன்
ஜன 08, 2025 19:14

எதற்க்காக போராட்டம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி.... இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்.... அவர் தான் இதற்க்கு பதில் சொல்ல தகுதியானவர் !!!


Srinivasan Narasimhan
ஜன 08, 2025 18:40

தமிழகத்தில் மீடியா விலை போயிட்டு. அரசியல் அடிமைகள். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி


VENKATASUBRAMANIAN
ஜன 08, 2025 18:22

நீதிமன்றம் என்ன செய்கிறது. இப்படியே ஒத்தி வைத்தால் எப்போது முடியும். மக்கள் நீதிமன்றத்தை நம்பியுள்ள ஆண்கள். அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்வது நீதிமன்றத்தின் கடமை அல்லவா


முக்கிய வீடியோ