உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ரூ.3 லட்சம் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு தி.மு.க., வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். தி.மு.க.,வினரின் தொடரும் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i8hgbu6e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த நான்கு வருடங்களில், ரூ.75 லட்சம் வரை, குவாரி உரிமையாளரிடமிருந்து இந்த தி.மு.க., வட்ட செயலாளர் வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. விசாரணை வளையத்தில் இருந்து ஊழல்வாதிகளைக் காப்பாற்ற, மக்கள் வரிப்பணத்தில் சுப்ரீம் கோர்ட் வரை செல்லும் முதல்வர் ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.அனைத்துத் துறைகளிலும் ஊழல்,கனிம வளங்கள் கொள்ளை, தி.மு.க., குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், யாருக்குமே பாதுகாப்பில்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து எந்தக் கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gajageswari
மே 24, 2025 11:59

மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆரஞ்சு குறியீடு வழங்கிய தொழிற்சாலை. போராட்டம் நடத்தி தடுத்த பிரமுகர்கள்,அதை பேஸ் புக்கில் பதவிட்டவர்


Kasimani Baskaran
மே 23, 2025 22:00

திராவிடம் என்ற போதை வஸ்த்தை வெள்ளைக்காரர்கள் விதைத்தார்கள்... இன்று அது ஒரு மதமாக தமிழனுக்கு மட்டும் திணிக்கப்பட்டு வளர்ந்து நிற்கிறது.


ஜெய்ஹிந்த்புரம்
மே 23, 2025 21:45

கடந்த நான்கு வருடங்களில், குவாரி உரிமையாளரிடமிருந்து இந்த தி.மு.க., வட்ட செயலாளர் வசூலித்திருப்பதாகத் தெரிகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
மே 23, 2025 21:41

சி எம் கேர்ஸ்


Ramesh Sargam
மே 23, 2025 21:31

கப்பம், அதாவது லஞ்சம். ஆனால் அவர்கள், அதாவது திமுகவினர் அதற்கு உபயோகப்படுத்தும் வார்த்தை அன்பளிப்பு. அரசு அதிகாரிகளுக்கு அன்பளிப்பு கொடுக்காமல் தமிழகத்தில் ஒரு பணியும் நிறைவேறாது.


V Venkatachalam
மே 23, 2025 21:05

கடவுளே சலித்து போய் இந்த திருட்டு திராவிடியா கூட்டத்தை ஒழித்து கட்டினால் தான் உண்டு. அந்த கடவுள் மூடிக்கொண்டு இருக்கும் கண்களை எப்போ திறந்து பார்ப்பார் என்பது அவருக்கே தெரியாது.


venugopal s
மே 23, 2025 21:13

பொறுத்துக் கொண்டு இருக்கும் கடவுள் திமுகவை என்ன செய்யப் போகிறார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை