உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி தர மறுப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி தர மறுப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காத மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து வரும் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என தி.மு.க., அறிவித்து உள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 9 ம் தேதி சென்னையில் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த எம்.பி.,க்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை பெற வேண்டும். அத்துடன் மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழகத்திகு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது' குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார்.இந்த நிதியை வழங்காதது குறித்து நேற்று தி.மு.க., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும், தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ம் தேதி (சனிக்கிழமை) காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில்துரைமுருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Bhakt
மார் 26, 2025 22:44

திராவிட மாடலா இல்லை பொய் மூட்டை மாடலா. தமிழகம் தான் இந்த திட்டத்திர்கான நிதி வாங்கியதில் நம்பர் ஒன்னுனு நேத்து பார்லியில் சொன்னாங்களே.


sridhar
மார் 26, 2025 21:36

பத்து பைசா கூட கொடுக்காதீங்க . எல்லாம் அப்பனும் மகனும் தின்னுடுவானுங்க . அடங்காபசி .


சந்திரன்
மார் 26, 2025 21:26

அது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். மத்திய அரசு திட்டம். மாநில அரசு பெரியார் பஞ்சாயத்து வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கி டுமிலனை குஷி படுத்தலாம். மத்திய அரசு பணம் தரவில்லை என்றால் வேலைய நிப்பாட்டிடலாம் எவனும் அழல. என்ன ஆட்டய போட முடியாது


rama adhavan
மார் 26, 2025 21:19

திமுக என்ற கட்சிக்கும் நிதி மத்திய அரசு தராததற்கும் என்ன சம்பந்தம்? தமிழக அரசு அல்லவா மத்திய அரசுடன் பேச வேண்டும். ஓரு கட்சி எப்படி அரசு வேலைக்குள் மூக்கை நுழைக்கலாம்? ரொம்ப ஓவர் ஆக இல்லை?


Ramesh Sargam
மார் 26, 2025 20:31

நிதி கிடைத்தாலும் அதை ஆட்டைப்போட்டுவிடுவார்கள்.


Kulandai kannan
மார் 26, 2025 18:58

இந்த 100 நாள் திட்டத்தின்மூலம் நாட்டில் பிடுங்கப்பட்ட ஆணிகள் எவ்வளவு??


தாமரை மலர்கிறது
மார் 26, 2025 18:54

100 நாள் வேலை திட்டம் வேலை இல்லாத மாநிலங்களுக்கு மட்டும் தான். பீகார், உபியிலிருந்து மக்கள் தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும்போது, தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்டம் சுத்தமாக தேவை இல்லாத திட்டம். மூடப்படவேண்டிய திட்டம். திமுக நூறு நாள் தூக்கத்திட்டத்திற்காக போராடினால், யாரும் கண்டுகொள்ள போவதில்லை.


sankaranarayanan
மார் 26, 2025 18:52

வேலையே இல்லாதபோது 100-நாள் வேலை திட்டம் என்று சொல்லி கட்சி பெருச்சாளிகள் பணத்தை ஏப்பம்விட்டதெல்லாம் கண்டுபிடித்தாகிவிட்டது. இனி மத்திய அரசு விழிப்புடன் செயல்படும்.வீணாக புலம்பவே வேண்டாம்.


G Mahalingam
மார் 26, 2025 18:43

திருடர்கள் திருடினாலும் அதற்கு தகுந்தாற்போல் பொய் கணக்கு எழுதி மத்திய அரசுக்கு கொடுங்கள். செலவழித்த பிறகு கணக்கு கொடுக்க வில்லை என்றால் எப்படி பணம் வரும்.


Pavanan
மார் 26, 2025 18:30

First scrap this nonsense scheme. In my village nobody is willing to work in the farm fields. Youths are encouraged to be lazy as there are many state and central schemes to keep the young generation at the TASMAC shops. It’s happening every day. Before 25 years I saw only few consuming liquor and now I see only few are not consuming liquor. The condition is same all across the Nation due to these nonsense schemes.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை