உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சியே ஒரு வெற்றுக் காகிதம்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியே ஒரு வெற்றுக் காகிதம்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. திமுக ஆட்சியே ஒரு வெற்று காகிதம்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கம்பன் பிறந்த தமிழகம் இன்று கல்வியில் பின்தங்கியுள்ளது. கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துவிட்டது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, சுய விளம்பரத்திற்காக அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=68dl2u8y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வெற்று காகிதம்

மாணவர்கள் புத்தகப் பையில் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அவலச் சூழல் நிலவுகிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க, உயர்கல்வியில் சில இடங்களை மட்டும் நிரப்பிவிட்டு, நடிகர்களை அழைத்து வந்து அரசு விளம்பரம் தேடுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாகக் கூறுகிறார். இது குறித்து நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறேன்; இதுவரை பதில் இல்லை. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஒரு வெற்று காகிதத்தைக் காட்டி, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். அவரிடம் இருந்தது வெற்று காகிதம்; அதுபோலவே இந்த அரசும் ஒரு வெற்று காகிதம்தான். இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும்.

எவ்வளவு பணம்…!

மக்கள் திமுக வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். நானும் சி.வி. சண்முகமும் சந்தித்தது ஒரு சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கும். டிசம்பரில் அதற்கான முடிவு தெரியும். கூட்டணியை மட்டும் வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். இறுதியாக, வரும் அக்டோபர் 12ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறோம். இதன் முதல் நிகழ்ச்சியில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொள்கிறார். இவ்வாறு நயினார் நாகந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

joe
செப் 29, 2025 20:17

இதுவரை இல்லாத அளவுக்கு மோடி அவர்களின் ஆட்சி மிக நல்ல செயல் பாட்டில் உள்ளதற்கு வெளி உலக நாடுகளின் பெரும்பாலான தலைவர்களுக்கே தெரியும். இது இப்படி இருக்க உள் நாட்டில் நீங்கள் மோடியை பிற்போக்கு படுத்தி பேசுவது சூரியனை பார்த்து நாய் குளிப்பதற்கு சமம். கிணற்று தவளையான உங்களுக்கு உண்மையான நிலை தெரியாது .மோடி அவர்களின் அரசியல் பாதை என்றுமே சுத்தமானது .இது உறுதி .


பாலாஜி
செப் 27, 2025 08:57

பாஜக ஆட்சி வெற்று அட்டை டம்ளர்டா நயினார் நாகேந்திரன்.


joe
செப் 26, 2025 19:57

இது திராவிட பூமி இல்லை .இது தமிழன் பூமி .நாம் தமிழர் .தமிழ் பூமி .


joe
செப் 26, 2025 19:51

தமிழகத்தில் மானங்கெட்ட அரசியலாகவே உள்ளது .


joe
செப் 26, 2025 19:49

ஸ்டாலினின் திராவிட மாடல் என்பதற்கு மதுரை ஐகோர்ட்டே ஒரு குட்டு வைத்தது. அய்யா ஸ்டாலின் அவர்களே அதை மறந்தீரோ ? .திராவிடம் என்பது பாகிஸ்தானில் உள்ள திராவிட நாகரீகத்தின் அந்த கால இடத்தையே குறிப்பிட்டுப்பனவன ஆகும் அந்த இடம் அங்குதான் உள்ளது .இங்கு இந்த நாடு தமிழநாடு .இது தமிழ் பூமி.தமிழன் பூமி .திராவிட பூமி இல்லை .தமிழன் -தமிழ் பூமிதான் . ..


joe
செப் 26, 2025 19:39

பொருளாதார குற்றவாளிகளுக்கு அரசியலில் பதவிகளும் கட்சியில் முன்னுரிமையும் கொடுத்து நாட்டை நாசமாக்கும் ஸ்டாலின் -இதுக்கு பதிலாக அரசியலை விட்டு விலகி ஏதாவது ஒரு தொழிலை செய்தாலாவது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். செய்வாரா?


joe
செப் 26, 2025 19:34

தேசத்தின் ஊழலின் அஸ்திவாரமே தி மு க என்பதே .பொருளாதார குற்றவாளிகளுக்கு பதவிகள் மற்றும் கட்சியில் முன்னுரிமை என மானங்கெட்ட அரசியல் வாதியே ஸ்டாலின் ஆகிய முதலமைச்சரே


joe
செப் 26, 2025 19:31

இந்தியாவில் ஒரு தேச துரோக ஊழல் கட்சி இருக்கிறது என்றால் அது தி மு க வும் ஒரு கட்சி .தி மு க வின் சொத்துக்கள் அனைத்தும் தேச துரோக ஊழல் மூலமே கட்சியின் சொத்துக்களாக சேர்க்கப்பட்டது .ஸ்டாலின் உயிர் உள்ளவரை உழைப்பாராம்,இந்த ஸ்டாலின் உயிர் உள்ளவரை பொருளாதார குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவும் ,பதவியும் கொடுத்து ஊழலுக்கு மேல் ஊழல் செய்யும் ஒரு தேச துரோகியாகவே வலம் வருகிறார் .இந்த மானங்கெட்ட அரசியல் தேவையா ?


Moorthy
செப் 26, 2025 19:20

பிஜேபி யின் இலக்கு 2026 தேர்தல் இல்லை என்று பிதற்றிய இவர் ,என்ன முயன்றாலும் 2026 தேர்தலில் பிஜேபி கு தற்போதுள்ள நாலு எம்மேலேயே கூட கிடைப்பது கடினமே. அண்ணாமலை இல்லாத பிஜேபி மீண்டும் 3% ஓட்டுகளை தாண்டாது


pakalavan
செப் 26, 2025 18:43

அமெரிக்காகாரன் அடிச்ச ஆப்புல மோடி அலறி அடிச்சி ஓடுவது உனக்கு தெரியலயா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை