உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்: அண்ணாமலை உறுதி

2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்: அண்ணாமலை உறுதி

சென்னை: '' 2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பேரணி நடக்கும்

நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயலிழந்து விட்டது. பிறகு எப்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க முடியும்?குற்றங்கள் அதிகரிப்பதால், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசார் மறுக்கின்றனர். முதலில் கிராமத்தில் நடந்தது தற்போது நகரின் மையப்பகுதியில் நடக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இதனை கண்டித்து மகளிர் அணியினர், நாளை (ஜன.,3ம் தேதி) மதுரையில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இதற்கு மதுரை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி இந்த பேரணி நடக்கும்.

வெள்ளை அறிக்கை வேண்டும்

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டு அதிகரித்து உள்ளது. தனியார் பள்ளி கூட்டமைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பங்கேற்றார். அங்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் 500 அரசு பள்ளிகளை தத்தெடுப்போம். சிஎஸ்ஆர் நிதி கொடுப்போம் எனக் கூறியதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.தற்போது இதனை மறுக்கின்றனர். தனியார் பள்ளிகள் ஏன் சிஎஸ்ஆர் கொடுக்க வேண்டும்? அரசு செய்ய வேண்டிய வேலையை அவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாரிடம் தாரை வார்த்து கொடுக்கும் வேலையை செய்ய துவங்கி உள்ளனர்.தி.மு.க.,வினர் ஏராளமானோர் பள்ளி நடத்துகின்றனர். சேதம் அடைந்த 10 ஆயிரம் பள்ளிகளை சீரமைப்போம் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.

என்ன நிர்வாகம்

தமிழக அரசு கடந்த ஆண்டு 90 ஆயிரம் கோடிகடன் வாங்கியது. இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்கின்றனர்?

வைகோவுக்கு பதில்

தி.மு.க.,வில் இருந்து வைகோ பிரிந்தபோது எதற்காக அக்கட்சியை அவர் எதிர்த்தாரோ தற்போது அதற்காக நாங்கள் எதிர்க்கிறோம். வைகோவை போன்று தி.மு.க.,வை விமர்சித்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் கண் முன்னால் 2026ல் தி.மு.க., ஆட்சியை அகற்றிக்காட்டுவோம். அதனை அவர் பார்க்க வேண்டும்.

புரியாது

இன்று வரை நான் செருப்பு போடாமல் இருக்கிறேன். எனக்கு நானே சாட்டையால் அடித்ததுக் கொண்டது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். தி.மு.க.,வினருக்கு ஏன் புரிய வேண்டும்? அவர்களுக்கு புரியாது. 2026 ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அவர்களுக்கு புரியும். அதுவரை புரியாது. கிராமத்தில் காவல் தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு சவுக்கடி என்பது புரியும். இதில் இருந்து பின் வாங்கப்போவது கிடையாது. 2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Oviya Vijay
ஜன 03, 2025 00:19

அதிமுக தயவால் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி பெற்ற 4 MLA க்களும் 2026 தேர்தலில் தமிழகத்திலிருந்து அகற்றப்படும்... இது தான் நிதர்சனம்...


Constitutional Goons
ஜன 02, 2025 23:25

பகற்கனவு கண்டுகொண்டே இருக்கவேண்டியதுதான்.பாஜவிலிருந்துகொண்டு அண்ணாமலை நல்லது நினைத்தாலும் நடக்காது. கெட்டது நினைத்தாலும் நடக்காது


பாலா
ஜன 02, 2025 22:47

முயற்சி திருவினையாக்கும் நல்வாழ்த்துகள்.


நல்லவன்
ஜன 02, 2025 22:09

படித்த முழு முட்டாள்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கிறீர்களா?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 21:36

இவரை, பாஜக தனது கைக்காஸைப் போட்டு லண்டனுக்கு அனுப்பி அரசியல் படிக்க சொல்லி அனுப்பியது. அங்கே போய் வந்து விட்டு, முன்னாடி இருந்த கொஞ்சனஞ்ச அறிவும் நாகரிகமும் கூட இழந்து விட்டார். தானே சாட்டையால அடிச்சுக்கறார். இவர் இருக்கும் வரை, தமிழ் நாட்டில் பாஜக காலுன்ற அல்ல, விரலைக் கூட ஊன்றமுடியாது. எனவே இவரையே தொடர்ந்து தலைவராக வைத்திருக்கவும்.


நல்லவன்
ஜன 02, 2025 22:10

படித்த முட்டாளா நீ


ghee
ஜன 02, 2025 22:16

அத எல்லாம் புறிஞ்சுகிற அளவுக்கு உன் போல கொத்தடிமைகள் அறிவு கிடையாதே...நீயும் தான் gazaettted ஆபீஸர் என்று அண்டபுளுகு சொன்னாய்


veera
ஜன 02, 2025 22:19

வந்துட்டான் அண்டபுளுகன் குண்டம்


Visu
ஜன 02, 2025 22:51

தொப்பி தெரியுது முக்காடு போட்டுகோ


Kasimani Baskaran
ஜன 03, 2025 00:25

வைகுண்டேஸ்வரன் - நாகரீகம் நடத்தையில் இருக்கவேண்டும். வந்தேறி திராவிடர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 02, 2025 20:32

லண்டன் போனது ஜோசியம் கற்கவா என்ன, இப்படி சொன்னவன் சொன்னவள் எல்லாம் பூமிக்குள் இப்போதும் எதிரே இருப்பது DMK மட்டும் தான், முதலில் நீ பிறந்து வளர்ந்து படித்த உன் குடும்பம் இருந்த சொந்த தெருவில் உள்ள வார்டு இல் நின்று வென்று காட்டு , MLA MP எல்லாம் லக்ஸ் கணக்கில் வோட்டு இருக்கும் வார்டு என்றால் 1000 க்குள் தான் இருக்கும் , நீ பிறந்த ஊர் எளிதில் வெற்றி பெறலாம் ,வெற்றி பெற்று காட்டேன் ,உன்னை சிறையில் இல் இருந்தே ஒருத்தன் 150000 வோட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்க வெச்சிருக்கான் , உள்ளூரில் அரக்குறிச்சி தோல்வி / வெளியூர் கோவையில் தோல்வி அப்புறம் எங்கு தான் வெற்றி பெறுவ


Velan Iyengaar
ஜன 02, 2025 20:19

ஆசை இருக்கு தாசில் பண்ண ....அம்சம் இருக்கு கழுதை மேய்க்க


ghee
ஜன 02, 2025 22:17

ஓ நீ சிட்னியில் ....


karthik
ஜன 02, 2025 19:52

அண்ணாமலை போன்ற படித்த தலைவர்கள் ஆட்சியில் அமர வேண்டும். மாற்றம் வேண்டும் , அரசியல் களம் மாற வேண்டும் திராவிடிய அரசியல் ஒழிய வேண்டும்.நம் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் பழக்கத்தை விட வேண்டும். இளைஞர்கள் முன்னேற வேண்டும், நம் தமிழ்நாடு முன்னேற வேண்டும்.


Anand
ஜன 02, 2025 20:09

மூன்றாவது படித்த பிரதமர் நன்றாகத்தானே ஆட்சி செய்கிறார்


karthik
ஜன 02, 2025 21:11

ஆனந்த் சாமி , நாம ஊருலே காமராஜர் நல்ல, மகத்தான ஆட்சி கொடுத்தார்...இப்போ இருக்கும் நிலைமைக்கு நம்ம தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை போன்ற மாற்று தலைவர் வேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் என்னை போன்ற சாதாரண மக்களுக்கு ஏற்ற மாதிரி, ஊழல் அற்று இருக்க வேண்டும்...அது அண்ணாமலையால் முடியும். நீங்களும் அந்த மாற்றத்திற்காக உதவுங்க.


A Viswanathan
ஜன 02, 2025 19:36

அதற்காக யாருடன் கூட்டணி வைத்தாலும் பரவாயில்லை. நாங்கள் வாக்களிக்கிறோம் உங்கள் கூட்டணிக்கு.


Duruvesan
ஜன 02, 2025 19:34

முதல்ல நீங்க பிஜேபி லே இருப்பீர்களா ? உங்க விரைவில் தூக்க போறாங்களாம் ,பிஜேபி தீயமுக கூட்டணி விரைவில் னு சொல்றாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை