உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி; தி.மு.க., ஆதரவு என தினகரன் காட்டம்

மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சி; தி.மு.க., ஆதரவு என தினகரன் காட்டம்

சென்னை : 'காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும், கர்நாடக அரசின் முயற்சியை, சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பதோடு, அரசியல் ரீதியாகவும், முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கி விட்டதாக, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன. 'எங்களின் அனுமதியின்றி, எந்த கொம்பனாலும், காவிரியின் குறுக்கே, அணை கட்ட முடியாது' என, தி.மு.க., அரசு வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான, நிலம் கணக்கீட்டுப் பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு துவங்கி இருக்கிறது.கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி, எந்த ஒரு இடத்திலும், புதிய அணையை கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்தியது. அதன்பிறகும் சட்ட விரோதமாக, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது.தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை, கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப் பெற முடியாத தி.மு.க., அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும், மாபெரும் அநீதி ஆகும்.கர்நாடகா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும், பெங்களூருவுக்கு ஓடோடி செல்லும் முதல்வர், தமிழகத்திற்கு வரும் கர்நாடகா துணை முதல்வரை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதல்வர், காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார். இக்கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 03, 2025 09:32

இவரோட வாலை யாரோ முறுக்கி விட்டு கத்தச் சொல்லியிருக்காங்க.


பிரேம்ஜி
ஜூலை 03, 2025 07:59

யாரு இவரு?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 03, 2025 07:02

மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சிசெய்வதற்கு தமிழக கடும் கண்டனத்தை, கோபத்தை தன் உதவியாளரிடம் தெரிவித்தார், தன் நெருங்கிய பொங்கியெழுந்தார். அதையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை. இதேபோல் கச்சத்தீவு நம்மை விட்டு சென்ற போது அப்போதய முதல்வர் கருணாநிதி தன் கடும் கண்டனத்தை, எதிர்ப்பை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படத்தை நேருக்கு நேர் பார்த்து கோபத்துடன் தெரிவித்தார். அதையும் பொருட்படுத்தாமல் கட்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது .. கண்டத்துக்குரியது ..


Svs Yaadum oore
ஜூலை 03, 2025 06:45

கர்நாடகா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும், பெங்களூருவுக்கு ஓடோடி செல்லும் தமிழக முதல்வர், தமிழகத்திற்கு வரும் கர்நாடகா துணை முதல்வரை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதல்வர், காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார்??..... இக்கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளதாம் . .....விடியலுக்கு சரியான கேள்வி ...


Svs Yaadum oore
ஜூலை 03, 2025 06:43

விடியல் கூட்டணி கட்சி காங்கிரஸ் தலைவர் உத்தர பிரதேசம் ஹிந்திக்காரன் டெல்லிக்காரன் இத்தாலி தமிழ் நாட்டுக்கு எதிராக சதித்திட்டமா ??.....கர்நாடக காங்கிரஸ் மேக்தாது அணை கட்ட டெல்லி இத்தாலி அனுமதி கொடுத்தள்ளாரா என்று தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும்.. இது பற்றி டெல்லி இத்தாலி காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் ....அப்படி பட்ட காங்கிரஸ் கட்சியுடன் விடியல் எதற்கு கூட்டணி ??...தமிழனை பழி வாங்கவா ??....விடியல் திராவிடனுங்க டெல்லி இத்தாலி காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் ...


முக்கிய வீடியோ