உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் தி.மு.க., போட்டியிடப் போவது 170 தொகுதிகள்: கூட்டணிக்கு 64 தொகுதிகள்

தேர்தலில் தி.மு.க., போட்டியிடப் போவது 170 தொகுதிகள்: கூட்டணிக்கு 64 தொகுதிகள்

நமது நிருபர்

கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் களமிறங்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. பா.ம.க.,வின் ராமதாசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனையும் சேர்த்தே கூட்டணியில் வைத்துக் கொள்ளவும் ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக எட்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஆயத்த பணி

தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில, மாவட்டச் செயலர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'கூட்டணி கட்சிகள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில், வரும் சட்டசபை தேர்தலுக்கு தொகுதிகள் ஒதுக்கினால் போதும்' என, முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பின், தி.மு.க., 170 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகள் வழங்கவும் தி.மு.க., முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், 'கூட்டணியில் தி.மு.க., மட்டும் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு வெற்றி பெற முடியும்' என, முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டு, அதற்கான முஸ்தீபுகளில் களம் இறங்கி உள்ளார். இதற்காக, 64 தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டும், இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கொடுத்த ஆலோசனையை, முதல்வர் ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

திட்டம்

கடந்த தேர்தலில் 25 தொகுதிகளை கேட்டுப் பெற்றிருந்த காங்., இம்முறை 40 தொகுதிகளை கேட்கிறது. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்ற 18 தொகுதிகளுக்கான இடங்கள் மட்டும் தான் ஒதுக்கப்படும்; அதை ஏற்காமல் காங்., முரண்டு பிடித்து கூட்டணியை விட்டு வெளியேறினால் வெளியேறட்டும் என்ற முடிவுக்கும் தி.மு.க., தரப்பு வந்துவிட்டது. அதேநேரம், கூட்டணியை பலப்படுத்தும் விதமாக தே.மு.தி.க.,வையும், பா.ம.க., ராமதாஸ் அணியையும், தி.மு.க., பக்கம் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்காக, தே.மு.தி.க.,வுக்கு எட்டு இடம், பா.ம.க., ராமதாஸ் அணிக்கு ஏழு இடம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க.,வையும் கூட்டணிக்குள் கொண்டு வர, தி.மு.க., தரப்பில் ரகசிய பேச்சும் நடத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை, பன்னீர்செல்வமும், தினகரனும் தி.மு.க., கூட்டணிக்குள் வந்தால், இரு தரப்புக்கும் சேர்த்து எட்டு தொகுதிகளை ஒதுக்கவும் தி.மு.க., தலைமை முடிவெடுத்து உள்ளது.

மாற்று வழி

இந்நிலையில், கூட்டணியில் உள்ள வி.சி., - கம்யூ., கட்சிகள் கூடுதல் தொகுதி கேட்டு முரண்டு பிடித்தால், அவர்களை சமாளிக்கவும் சில திட்டங்களை தி.மு.க., தலைமை கையில் வைத்துள்ளது. இந்த திட்டத்தில், எங்கேணும் முரண்பாடுகள் ஏற்பட்டு அது பெரிதானால், அதை சரிசெய்ய, தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகளில் இருந்து ஒன்றிரண்டை குறைத்துக் கொள்ளவும் ஸ்டாலின் யோசித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

வாய்மையே வெல்லும்
ஜன 02, 2026 08:54

மூர்க்கன்ஸ் கட்சி இனிமே விலை போகாது. விரட்டி அடிக்கவேண்டிய கொடிய நஞ்சு. தமிழக வளர்ச்சிக்கே கேடு அறிவாலய கூடாரம். அவர்களை ஒழிக என சொல்வதில் நமக்கென்ன வஞ்சனை ?


T.sthivinayagam
ஜன 02, 2026 06:50

பாஜக எத்தனை தொகுதிகளை கூட்டணி கட்சிகளூக்கு கொடுக்கும் என்று தொண்டர்கள் கேட்கிறார்கள்.


vivek
ஜன 02, 2026 08:03

பாஜக இருநூறு தொகுதியில்..இப்போ எரியுதா.


Kasimani Baskaran
ஜன 02, 2026 04:24

காங்கிரஸ் சிறுபான்மை ஓட்டுக்களை பிரித்து தீமக்காவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க நினைக்கிறது. ஆனால் பெரியாரிஸ்ட்டான விசை அண்ணா அதற்க்கு ஒத்துக்கொள்வாரா என்பது தெரியவில்லை. பல பிம்பங்கள் ஒன்றிணைந்து ஜெயித்து விட முடியும் என்று தீம்க்கா கனவு காண்கிறது.


sankaranarayanan
ஜன 02, 2026 00:40

ஆதிகாலம் முதல் திமுக எதிர் கட்சி அதிமுகவிலிருந்து எப்போது யார் யார் விலகி திமுகவுடன் கூட்டு சேர்வார்கள் என்றே காத்திருந்து காத்துகிருந்து பிறகுதான் தனது அறிக்கையை வெளிவிடும் யார் யார் விலகி வந்தார்களோ அவர்களெக்கெல்லாம் மாலை சுற்றி ஒரு தொகுதி தரப்படும் அவர் வெற்றிபெறவும் முயற்சிகள் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சன்மானமாக அமைச்சர் பதவியும் தரப்படும் இப்படித்தான் கலைஞர் முதல் குமரன் வரை பின்பற்றி எதிர் காட்சிகளை உடைக்க அரசியல் சதி செய்யும் இத்தகு கலை இப்போது ஒன்றும் புதிது அல்ல திராவிட மாடல் அரசவையில் இப்போது அதிகமான அமைச்சர்கள் இப்படித்தான் அதிமுக விலிருந்து ஓடிவத்தவர்கள்


vaiko
ஜன 02, 2026 03:58

அதனால்தான் தேர்தலில் பழனிசாமியும் பிரேமலதாவும் மட்டும் ஜோடி போட்டார்கள்7


புதிய வீடியோ