உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தொடரும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

2026ல் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை தொடரும்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது கடிதம்: ரோடுஷோ வழியில், மதுரை மாவட்டம் பந்தல்குடியில் முதல்வரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ., மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, தி.மு.க.,வை விமர்சிப்பதையே முழுநேர, பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும். 27 தீர்மானங்கள்மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.,வையும், அதனுடன் கூட்டணி வைத்து தமிழகத்துக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க.,வையும் மக்களின் ஆதரவுடன் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வீழ்த்தி, தி.மு.க., 7வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் கட்சியினர் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.மகத்தான வெற்றிஓரணியில் தமிழகம் என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். தி.மு.க., 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும் போது உங்களின் முகம் கண்டு மகிழ்வேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

ஜூன் 03, 2025 11:09

தொடர் கொலைகளை பார்த்தல் அப்படிதான் தோன்றுகிறது


ராமகிருஷ்ணன்
ஜூன் 03, 2025 06:01

சென்ற தேர்தலுக்கு 550 டூபாகூர் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டது. வர உள்ள தேர்தலுக்கு முதல் புளுகு இதான் அடுத்த 1000 புளுகுகளை மூட்டை கட்டி வைத்து உள்ளனர். வரிசையாக வரும் இளித்தவாய் தமிழர்களே ரெடியா இருங்க.


ஜூன் 03, 2025 13:17

1000 புளுகு மூட்டைகள் ஒருதொகுத்திமட்டும் ...


தாமரை மலர்கிறது
ஜூன் 02, 2025 23:39

எடப்பாடி முதல்வர் ஆவார். திமுகவை தோற்கடிக்க பிஜேபி தலைமையிலான அணி துணை முதல்வர் பதவியை விஜய்க்கு விட்டுக்கொடுக்க கூட தயாராக உள்ளது. ஸ்டாலின் ஜெயிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்தால், குதிரைக்கு கொம்பு முளைத்து, ஸ்டாலின் ஜெயித்தால், தமிழகம் ஐந்து துண்டுகளாக சிதறடிக்க படும். ஸ்டாலின் சென்னைக்கு தான் மேயர் ஆகமுடியும் ஒழிய, தமிழக முதல்வர் மீண்டும் ஆகமுடியாது.


Ramesh Sargam
ஜூன் 02, 2025 20:06

Match Fixing கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன புதுஸ்ஸா Election Fixing?


Sakthi
ஜூன் 02, 2025 20:04

சமுதாயம் மாநிலம் எக்கேடு கெட்டாலும் பரவில்லை என்று திமுக க்கு ஓட்டு போடும் சிறிதுவ முஸ்லிம் சமுதாய ஓட்டு இருக்கும் தைரியம் இப்படி பேச வைக்கிறது


Kumar Kumzi
ஜூன் 02, 2025 17:47

கோபாலபுரம் கஜானா இன்னும் நிரம்பவில்லை போலருக்கு


Karthikeyan
ஜூன் 02, 2025 17:16

நிச்சயம் திமுகதான் மீண்டும் வெல்லும்..


Kumar Kumzi
ஜூன் 02, 2025 17:45

ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் ஓட்டு போடுற கொத்தடிமையின் கருத்து ஹாஹாஹா


Murugesan
ஜூன் 02, 2025 19:43

பணத்திற்காக ஓட்டு போட்ட கேவலமான அடிமைகள்


Narayanan
ஜூன் 02, 2025 17:02

இத்தனை கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்தினால் அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்றமுடியாது


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2025 16:55

எங்கள் ஆட்சியில் உங்களுக்கு குறைவில்லாமல் ஊழல் கற்பழிப்பு கொலை நடக்க ஆவன ஏற்பாடுகள் நாங்கள் செய்வோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம் ஆகவே எங்கள் கட்சிக்கு உங்கள் ஒவ்வொரு ஒட்டுக்கும் ரூ 3000 வாங்கிக்கொண்டு வோட்டு கொடுத்து எங்களை தேர்ந்தெடுக்க எங்களுக்கு வோட்டு போடுங்கள் இப்படிக்கு திராவிட மடியல் அரசு


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 02, 2025 16:52

2026 ல் 234 தொகுதிகளுக்கும் மேல் கழகம் வெற்றி பெறும். தொகுதி மறு வரையறை செய்த பின்னர் 2031 ல் சுமார் முன்னூறு தொகுதிகளில் வெல்லும். அப்போது எல்லா உ பி க்களுக்கும் கொம்பு கொம்பாய் முளைத்திருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை