உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பது அல்ல; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பது அல்ல; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: 'தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பதல்ல. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும் என்பது தான்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது கடிதம்:

ஹிந்தி நம் நாட்டின் தேசிய மொழி. அதனை யாரும் புறக்கணிக்கக் கூடாது என பா.ஜ.,வினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் அலுவல் மொழிதான் ஹிந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. ஹிந்தி தான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. இந்திய ஒன்றியம் என்பதே பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களைக் கொண்டதாகும். மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி ஆட்சி மொழியாக உள்ளது.

இதுவே நோக்கம்!

தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியாவின் தேசிய மொழிகள் தான். ஹிந்தி மட்டுமே தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி. மூலமொழி என்றால் அதிலிருந்து தான் மற்ற மொழிகள் தோன்ற முடியும்.

எவ்வளவு நீதி?

தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத் தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ., வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறு பாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும். 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி.

உலக சரித்திரம்

இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. தமிழகத்துக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித்திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 81 )

மோகன்
மார் 07, 2025 17:58

ஹா. ஹா. ஹா..... சிரிப்புதான் வருது. இவரும் எப்படியெல்லாமோ தான் உருட்டுறார். மக்கள் இனி உங்களை நம்ப மாட்டார்கள்.


ranganathan n
மார் 07, 2025 13:13

குடிகாரர்களாக ஆக்குவது


sethu
மார் 06, 2025 08:45

பெற்றோர்களுக்கு தெரியும் பிள்ளைகள் என்ன மொழி படிக்கவேண்டும் என


Nagarajan S
மார் 05, 2025 19:48

இந்தியாவில் 60% மக்கள் ஹிந்தி மொழி பேசுகிறார்கள். ஏன் அதை இதுநாள் வரை மத்திய அரசுகள் தேசிய மொழியாக ஆக்காமல் இருந்தார்கள்?


தேவதாஸ் புனே
மார் 05, 2025 19:17

சரி ..... ஒத்துகிறோம்..... அப்போ உங்க கட்சிக்காரங்க .... அதிமுக கட்சிக்காரங்க நடத்துற எல்லா பள்ளிகளிலும் ஹிந்தி மொழி பாடம் சொல்லிக் கொடுக்க கூடாது...... அரசு பள்ளிகளில் என்னென்ன பாடங்கள் உள்ளனவோ......அதே பாடங்கள் தான் அவர்கள் பள்ளிகளிலும் இருக்க வேண்டும்..... சம்மதமா......


Balasubramanian
மார் 05, 2025 17:54

சரி ஐயா சம்ஸ்கிருதம் இந்திய மொழிகள் அனைத்திற்கும் மூலம் இல்லை! தமிழ் மொழி மட்டுமே அறிந்த தாங்கள் மூலம் அங்கீகாரம் ஆதிக்கம் இவற்றிற்கு இணையான தமிழ் சொற்களை கூறவும்


Balamurugan
மார் 05, 2025 17:54

தேசிய நெடுஞ்சாலைகளை தவிர மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. 40 வயதிற்குள் இடுப்பு எலும்பு உடைந்துவிடும் போல தோன்றுகிறது. இதையெல்லாம் கண்டிப்பாக செய்யவேண்டிய பணிகள் என்ற நோக்கம் உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா?


என்றும் இந்தியன்
மார் 05, 2025 16:31

இப்படி இருக்கின்றது திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசின் ஆட்சி . கேள்வி - உனது பெயர் என்ன??? ஸ்டாலின் பதில் - பெயர் என்றால் என்ன??? அதை இந்தியில் சொல்லமாட்டேன் பெயர் பலவிதம் ஒன்று வீட்டுப்பெயர் இன்னொன்று பள்ளிக்கூடத்தில், இன்னொன்று உறவினர்கள் அழைப்பதில், நண்பர்கள் அழைப்பதில், இன்னொரு birth certificate ல், பெயர் என்பது முக்கியமே அல்ல. இப்படி ஒரு சின்ன பதில் ஸ்டாலின். இப்படித்தான் இருக்கின்றது ஸ்டாலினின் ஆய்வு அதாவது வாய்வு விடுவது


ஆரூர் ரங்
மார் 05, 2025 15:03

மாணவர் என்ற போர்வையில்  சமூக விரோத ரவுடிக் கும்பல்கள் வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துவதாகவும் ’விடுதலை’யில் எழுதினாராம், மேலும் ‘இதனால் கெட்டவர்கள் நம் மக்களின் பிள்ளைகள்தானே! பாவம், இந்தக் காலித்தனத்தில் 100 க்கு 50 பேர்கூட மாணவர்கள் இருக்க மாட்டார்கள். 50 பங்குக்குமேல் கண்ணீர்த்துளி (தி.மு.க?.) காலிகளும் பணக்காரரால் ஏவப்பட்ட காலிகளும் இருந்து நடத்தி இருக்கிறார்கள்! அவர்கள்தான் திட்டம் போடுகிறார்கள். அதை மாணவர் பேரால் பத்திரிகைக்காரர்கள் வெளியிடுகிறார்கள். காலிகளே நடத்துகிறார்கள்’ என்கிறார். பகுத்தறிவிருக்கிறவங்க திமுக வில இருக்கமுடியாது.


Venkataraman
மார் 05, 2025 14:19

இந்தி பிரசார சபா தமிழகத்தில் இருப்பது போல தமீழ் பிரசார சபாவை வட மாநிலங்களில் ஏன் நடத்தவில்லை என்று கேடகிறார். தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஏன் திணிக்கப்படுகிறது? ஆங்கிலம் படிப்பவர்கள் எல்லோருக்கும் வெளி நாட்டில் வேலை கிடைத்து விடுகிறதா? வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் மட்டும் ஆங்கிலம் படித்தால் போதாதா? அது தவிர, ஆங்கிலத்தை இங்கு திணிப்பதற்கு முன்பு, ஆங்கிலேயர்களை தமிழ் படிக்க வற்புறுத்தினீர்களா? தமிழ் பிரசார சபா இங்கிலாந்தில் திறக்கப்பட்டதா ?


புதிய வீடியோ