உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பில் பங்கேற்பு; குரூப் -1 தேர்வில் சர்ச்சை கேள்வி

தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பில் பங்கேற்பு; குரூப் -1 தேர்வில் சர்ச்சை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்; குரூப் -1 முதல் நிலை தேர்வில் தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றது என சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட பல துறைகளுக்கு மாவட்ட அதிகாரிகள் பதவிக்கு நேற்று முன்தினம் தமிழகத்தில் குரூப் -1 முதல் நிலை தேர்வு நடந்தது. இதனை 2.30 லட்சம் பேர் எழுதினர்.இத்தேர்வில் பொது தமிழ், இந்தியா, உலக வரலாறு, அறிவியல், கணிதம், பொருளாதாரம், மத்திய, மாநில அரசின் திட்டங்கள், நடப்பு செய்திகள் உள்ளிட்ட பல துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் தேர்வர்கள் படித்து தேர்வு எழுதினர்.இத்தேர்வில், கூற்று(ஏ): தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. கூற்று (ஆர்) : தி.மு.க., மக்களை தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வலியுறுத்தியது என்ற கேள்வி இருந்தது.மத்திய அரசு அமல்படுத்திய ஹிந்தி ஆதரவு திட்டத்தை தி.மு.க., வினர் எதிர்த்து போராட்டம் செய்து மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டதால் போலீசார் கைது செய்தனர்.இதனை சாதனை போல் கூறி குரூப் -1 தேர்வில் கேள்வியாக இருந்தது தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.பழமையான அரசியல் கட்சிகளை தோற்றுவித்த ஆண்டு, அதன் தலைவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி உயர் பதவிக்கான தேர்வில் கேள்வி கேட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 12:04

1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் துவக்கியது திமுக அல்ல. தமிழாசிரியர்கள், புலவர்களே. பின்னர் தேர்தல் அரசியல் லாபத்துக்காக திமுக போராட்டத்தை ஆதரித்துவிட்டு பின்னர் திடீரென பின்வாங்கியது.


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 11:23

இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் காலித்தனம். ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாசவேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்?எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம். ( பதிப்புரை . இந்தி எதிர்ப்பு. அன்றும் இன்றும்). ஆக இவங்க குருவே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கண்டித்தார்.


Ramaraj P
ஜூன் 17, 2025 07:23

தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80-9०% பேருக்கு தமிழில் எழுதத் தெரியாது. ஆனால் ஹிந்தி நன்றாக தெரியும்.


Siva Balan
ஜூன் 17, 2025 06:52

திமுகவை ஆரம்பித்தவர் யார் என்று எந்த திமுக காரனுக்காவது தெரியுமா?


Kasimani Baskaran
ஜூன் 17, 2025 03:54

[F] - கனிமொழி மற்றும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ஹிந்தி படிக்கும் உரிமை தீம்க்கா தலைமையால் கொடுக்கப்பட்டது. தீம்க்கா நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி படிக்கமுடியும் என்ற கூற்றயும் சேர்த்து இருக்கலாம்...


Mani . V
ஜூன் 17, 2025 03:54

போறபோக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டை உருவாக்கியது ஊழல்பேர்வழி கருணாநிதி என்று வரலாற்றை எழுதினாலும் ஆச்சர்யம் இல்லை.


xyzabc
ஜூன் 17, 2025 03:46

என்ன தப்பு? அர்த்தம் உள்ள கேள்வி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை