உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மத நம்பிக்கைகளில் தலையிட கூடாது

 மத நம்பிக்கைகளில் தலையிட கூடாது

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்துாணில் தீபம் ஏற்ற கோரிக்கை வைத்து வரும் அனைவரும், எந்த கட்சியையும் சேராதவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே கட்சி முருகன் கட்சி,தான். எனக்கும் முருகன் தான் குல தெய்வம்.தீபத்துாணில் தீபம் ஏற்றினால் சோறு கிடைத்து விடுமா என திருமாவளவன் கேட்கிறார். அவர், தன் கட்சியை கலைத்தால், பத்தாயிரம் பேருக்கு சோறு போடுகிறேன். தி.மு.க., உங்கள் கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கப் போகிறது என்ற விவகாரத்தில் கவனம் செலுத்துங்கள். எங்களுக்கான மத நம்பிக்கையில் தலையிடக்கூடாது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார்; ரம்ஜான் விழாவில், நோன்பு கஞ்சி குடிக்கிறார். அதை தவறு என சொல்லவில்லை. ஆனால், சகோதர மனப்பான்மையுடன் ஹிந்து விழாக்களுக்கு வருவதை முதல்வர் தவிர்ப்பது சரியல்ல. - கஸ்துாரி, மாநில செயலர், கலை, கலாசார பிரிவு, தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி