உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரை டாக்டர் பரிந்துரையின்றி சாப்பிடாதீர்

ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரை டாக்டர் பரிந்துரையின்றி சாப்பிடாதீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரைகளை, டாக்டர் பரிந்துரையின்றி உட்கொள்ள வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:

கோடை காலத்தில், அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் உப்பு கலந்த எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை, எடுத்துக் கொள்ளலாம். வியர்வை எளிதில் வெளியேறும்படி, மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமுள்ள, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.மயக்கம், உடல்சோர்வு, அதிக தாகம், தலைவலி, மணிக்கட்டு, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்ச்சலை குறைக்கும் நோக்கத்துடன், பாராசிட்டமல், ஆஸ்பிரின் ஆகிய மாத்திரைகளை வழங்கக் கூடாது. டாக்டர் பரிந்துரைப்படி மட்டுமே, மாத்திரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:

'வெப்ப வாதம்' பாதிக்கப்பட்டு, மயக்கம் அடைந்திருந்தாலோ, உடல் சோர்வாக காணப்பட்டாலோ, உடனடியாக நிழல் தரக்கூடிய இடங்களில், ஒரு பக்கமாக படுக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு, இளநீர், மோர் அருந்த கொடுத்து, உடல் சூட்டை குறைக்கலாம். நீரில் நனைத்த துணியை வைத்து, உடல் சூட்டை தணிக்க வேண்டும்.காய்ச்சல் என நினைத்து, ஆஸ்பிரின், பாராசிட்டாமல் மாத்திரை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு வேளை கொடுத்தால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Marimuthu
மார் 20, 2025 17:36

டாக்டருக்கு தரக்கூடிய பீஸ் கிடைக்காமல் போகுது


Marimuthu
மார் 20, 2025 17:34

டாக்டரிடம் சென்றால் 300 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும்


Priyan Vadanad
மார் 20, 2025 09:14

ஆஸ்பிரின், பாராசிட்டமால் இதுவரை எல்லோரும் சாப்பிட்டு வந்த மருந்துக்கள். மருத்துவத்துறைக்கு இவைகள்மீது ஏனிந்த கோபம்?


Karthik
மார் 20, 2025 16:56

இப்படி நாமலே 1 , 2 ரூபாய்ல வைத்தியம் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா.. அப்புறம் பாவம் டாக்டர் ""படிச்சதுக்கு?"" யார் ""பீஸ்"" குடுப்பாங்களாம் வட்டியோட..?. இந்த பொதுநளத்துக்குள்ள ஒரு சுயநலமும் எட்டி பாக்குறா மாதிரி தெரியுது எனக்கு


முக்கிய வீடியோ