உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: கஜமுகனை வணங்கிய வளர்ப்பு யானைகள்

முதுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: கஜமுகனை வணங்கிய வளர்ப்பு யானைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி அடித்து, கோவிலை சுற்றி வலம் வந்து கஜமுகனை வணங்கின. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அலங்கரித்து மாலை அணிவித்து, வரிசையில் நிறுத்தப்பட்டன. விழாவை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி ஆகியவை, தும்பிக்கையில் கோவில் மணியை பிடித்து அடித்தப்படி, கோவிலை மூன்று முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கின. கோவில் முன் வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தியபடி விநாயகரை வணங்கின. இதன்பின், வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுடன், பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டன. விழாவில், வனச்சரகர்கள் மேகலா, குலோதுங்கசோழன், பாஸ்கர், வன ஊழியர்கள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தஞ்சை மன்னர்
ஆக 28, 2025 10:45

எல்லா இடத்திலும் கஜ முகத்தனுக்கு வரவேற்புதான்


sundarsvpr
ஆக 28, 2025 09:39

உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் நம்முடைய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. முயற்சிக்கு பலன் கொடுப்பது ஆண்டவன். நம் கடன் பணி செய்வதே. யானைகளை பழக்கினோம் . அவ்வளவுதான்.


Barakat Ali
ஆக 28, 2025 08:25

அவை அப்படிப் பழக்கப்பட்டுள்ளன ......


Giri
ஆக 28, 2025 10:21

உங்களுக்கும் ஒரு பழக்கம் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை