உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; அதிபர் டிரம்ப் நடவடிக்கை

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; அதிபர் டிரம்ப் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசுசாரா துறை ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்த துறையின் தலைவராக உள்ளார். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதே டிரம்பின் நோக்கமாக இருக்கிறது.சமீபத்தில் தாமாக முன் வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதம் ஊதியம் வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த உத்தரவுக்கு அமெரிக்கா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எரிசக்தி துறையில் 1,200 முதல் 2 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.அதேபோல், அமெரிக்கா அணு ஆயுதக் குழுவை நிர்வகிக்கும் மற்றும் உலகம் முழுவதும் கதிரியக்கப் பொருட்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திலிருந்து 325 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.அத்தியாவசியமான தேவைக்கான ஊழியர்களை மட்டும் பணியில் வைத்து இருக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அரசு ஊழியர்களுக்கு நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Laddoo
பிப் 15, 2025 19:27

அமெரிக்கா பாலிசியே ஹையர் அண்ட் பையர் தான்


Haja Kuthubdeen
பிப் 15, 2025 16:21

ட்ரம்ப்..மஸ்க் இருவருமே வெற்றிகரமான தொழில் அதிபர்கள்.அவர்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு....


Jay
பிப் 15, 2025 15:54

ட்ரம்பு செய்ததை ஏன் இங்கு செய்யக்கூடாது? தமிழக அரசின் வருமானத்தில் 90% க்கு மேல் ஊழியர்களின் சம்பளத்திற்கும் பழைய பென்ஷன் திட்டத்தில் பென்ஷன் வாங்குபவருக்குமே செலவாகி போகிறது. அரசு கொடுக்கும் அனைத்து இலவசங்களும் மற்றும் ரோடு போடுதல், பில்டிங் கட்டுதல் போன்ற அனைத்தையும் கடனில் தான் அரசு நடக்கிறது. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக்கில் மக்களை குடிக்க வைத்து, குடும்பங்களை கெடுத்து அதில் வரும் வருமானத்திலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு தான் போகிறது. புதிதாக சேரும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 40% குறைத்தால் டாஸ்மாக்கில் இருந்து தமிழகத்தை விடுவிக்க முயற்சி எடுக்கலாம். இதன் மூலம் மத்திய அரசின் சம்பளம் மக்களை ஈர்ப்பதாக இருக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் வேலைக்கும் முயற்சி செய்வார்கள். ரயில்வே டிக்கெட் கொடுப்பவர்கள் தமிழ் பேசுபவர்கள் இல்லை என்ற குறை மறையும்.


Ganapathy
பிப் 15, 2025 13:45

ஆப்பு வாங்குறது எல்லாமே டூல்கிட் கோஷ்டிங்க


அசோகன்
பிப் 15, 2025 12:29

தொழிலாளர்களை நீக்கவில்லை.... deep ஸ்டேட் பல ஆயிரம் பேர்களை தங்களுக்கு கீழே வேலை செய்ய அரசு பணத்தில் நியமித்தர்கள் அதில் 90% பேர் யார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாது ஆபீஸ் ம் கிடையாதுஅவர்களை தான் களை எடுக்கிறார் ....... இதுதான் சரியான தகவல் நீங்களும் உபி போல news போடாதீங்க பாஸ்


Ramesh Sargam
பிப் 15, 2025 12:26

இதுபோன்று இவர் அதிரடியாக பணியாளர்களை வேலை நீக்கம் செய்தால், அவர்கள் வாழ்வாதாரம் மிக மிக பாதிக்கப்படும். அவர்கள் இப்பொழுது வேலை தேடி வேறுநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பார்கள். அங்குள்ள அரசு ஏற்கனவே ட்ரம்ப்பினால் துரத்தப்பட்ட ஆத்திரத்தில், அமெரிக்காவிலிருந்து வேலை தேடி வருபவர்களை உள்ளே சேர்க்கமாட்டார்கள். ட்ரம்ப் தன்னிச்சையாக எடுக்கும் பல முடிவுகள், மேலும் மேலும் அவருக்கும், அமெரிக்காவுக்கும் பல பல பிரச்சினைகளை ஏட்படுத்து. ட்ரம்ப் நிதானமாக செயல்படவேண்டும். இல்லையென்றால், அவ்வளவுதான்...


Oru Indiyan
பிப் 15, 2025 12:17

கடைசியில் ட்ரம்ப்பும் எலன் மஸ்க் மட்டுமே அரசு ஊழியர்களாக இருப்பார்கள்


visu
பிப் 15, 2025 16:31

அமெரிக்கா மாடேலே தனியார் மாயம் என்பதுதான் அத்தியாவசிய பணி தவிர அனைத்துமே தனியார்தான் அது சிறப்பாக செயல்படும் ராணுவ தளவாடம் முதல் ராக்கெட் விடுவது வரை அனைத்தும் தனியர்தான் .நம்ம HAL 25000 ஊழியர்களை வைத்துகொண்டு விமானங்களை தயாரிக்க முடியாமல் கொழுத்த ஊதியம் ஓய்வூதியம் மட்டும் பெற்று கொண்டு உள்ளார்கள் இது போன்ற துறைகளை தனியாரிடம் அளித்தால் போட்டி மூலம் சிறப்பான தயாரிப்புகள் கிடைக்கும்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 15, 2025 11:55

திராவிட மாடலில் எல்லா அரசு துறைகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான நபர்களை வீட்டுக்கு அனுப்பலாம்.


SS
பிப் 15, 2025 11:49

கார்ப்ரேட் கம்பெனி உரிமையாளர்கள் கையில் அரசு நிர்வாகம் கொடுக்கப்பட்டால் இப்படித்தான் நடக்கும். முதலாளிகள் எப்போதும் லாப நட்டத்தினை பற்றியே கவலைபடுவார்கள். பெரும்பான்மை மக்களின் நலன்கள் குறித்து அவர்கள் கவலைபடமாட்டார்கள் என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை