உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்: விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்: விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''2026ம் ஆண்டு தேர்தல் பற்றியோ, காமராஜர், இளைய காமராஜர் என்று அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள்'' என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 13) 3ம் கட்டமாக 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி த.வெ.க., தலைவர் விஜய் கவுரவித்தார். விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qwkdy0eb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எல்லோருக்கும் வணக்கம். நேற்று குஜராத்தில் ஒரு மிகப்பெரிய சோகமான விமான விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படத்தை பார்க்கும் போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. இறந்தவர்கள் எல்லாருக்காகவும் 2 நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்துவோம். எல்லோரும் ரொம்ப துரத்தில் இருந்து வந்து இருக்கிறீர்கள். ஒரு சின்ன வேண்டுகோள். இந்த சந்தர்ப்பத்தில், யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். பேச்சை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி கொள்ளலாம். 2026ம் ஆண்டு தேர்தல் பற்றியோ, காமராஜர், இளைய காமராஜர் அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியர், உங்கள் ஸ்கூல் பற்றி பேசுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள். தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் பேசாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, விருது வழங்கும் விழாவில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் அஞ்சலி செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

theruvasagan
ஜூன் 13, 2025 21:18

வேண்டுமானால் கண்ணியமான தொட்ட பெட்டா பாடலுக்காக முட்டை பரோட்டா போட்ட காம..ராசு என்று அடைமொழியோடு அழைக்கலாம்.


ramesh
ஜூன் 13, 2025 18:00

காமராஜர் என்பவர் ஒருவர் மட்டுமே . அவருடன் மற்றவர்களை ஒப்பிட்டு பேசுவதே காமராஜருக்கு மரியாதை குறைவு ஆகும் . அவரை தமிழ் நாட்டில் தோற்கடித்த பாவத்தால் தான் இன்று தமிழ் நாடு இவ்வளவு கேவலமான ஆட்சியாளர்களை பார்த்து கொண்டு இருக்கிறது


என்றும் இந்தியன்
ஜூன் 13, 2025 17:54

தன்னை இளைய காமராஜர் என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்று மறைமுக கட்டளை இது???இதன் உண்மை அர்த்தம் நானும் படிக்காதவன் தான் என்று கொள்ளுங்கள் அர்த்தம் சரியாக இருக்கும்


Anand
ஜூன் 13, 2025 17:21

நெனப்பு,பொழப்பை கெடுக்கும். பொழப்பு அடுத்த வருஷம் கெட்டு , குட்டி சுவர் ஆயிடும்


Anand
ஜூன் 13, 2025 17:09

இந்த மொட்டை பையன் காமராஜரின் கால் தூசிக்கு கூட சமன் இல்லாதவன்


Thamizhan
ஜூன் 13, 2025 16:52

அப்போ நீங்க இளைய விஸ்வகுரு இல்லையா ?


CS
ஜூன் 13, 2025 16:26

Tamilnadu spoiled by movie actor and actress glamour and influence. Even literate people are spending their time on celebrities but not in their families. They don’t treat them as another human being. Honestly they are super rich and they use your vulnerability for their gain


நாஞ்சில் நாடோடி
ஜூன் 13, 2025 16:22

காருக்கு வரி கட்டிடாதவன் காமராஜராம் ...


நாஞ்சில் நாடோடி
ஜூன் 13, 2025 16:21

காமராஜர் காலத்தில் அரசியல் புனிதமாக இருந்தது. அதன் பின் வந்த திராவிட கூத்தாடிகள் சாக்கடையாக்கி விட்டனர்...


R.MURALIKRISHNAN
ஜூன் 13, 2025 15:46

காமராஜருக்கும், காசுக்கு வேஷம் போடும் விஜய்க்கும் என்ன சம்பந்தம். தமிழா, கர்ம வீரரை கேவலப்படுத்தாதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை