உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக்கில் வராதீங்க: பாதுகாப்பு முக்கியம்; கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள்

பைக்கில் வராதீங்க: பாதுகாப்பு முக்கியம்; கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ' மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பைக்கில் வருவதை தவிர்த்தல் நன்று' என நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்தார்.இது குறித்து சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7y2czn5j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பைக்கில் வருவதை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வர வேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வர வேண்டும். நாளை (அக்.,27) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
அக் 26, 2024 21:54

ஆபத்து எங்கிருந்துவேண்டுமானாலும் வரலாம். பைக்கில் வருவதால் மட்டும் வராது. ரோட்டோரம் நடந்து செல்பவர்களும் வாகனங்கள் மோதி அனாவசியமா உயிர் துறக்கிறார்கள். உன்னுடைய மாநாட்டுக்கு வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியும் அவதிப்படுவார்கள்.


sridhar
அக் 26, 2024 20:34

கூட்டம் குறைவாக இருந்தால் சாக்கு சொல்லிக்கொள்ள உதவும்.


GoK
அக் 26, 2024 17:57

இப்படி வேலையில்லா கூட்டங்கள் தமிழ் நாட்டிலா ...கட்டிட வேலை ரோடு, பாலம் கட்டும் வேலை உணவகங்களில் பரிமாறும் வேலை அத்தனையிலும் தமிழ் பேசுபவர்களை காணோம் முரசொலி ஓசிக்குடும்பம் என்ன சொல்லுதுன்னா வடக்கேயிருந்து வந்தவங்க பாத்ரூம் கழுவுறாங்க இவனும் இவிங்க ஆளுங்களும் என்னமோ நிலாவுக்கு போயி கோட்டை கட்டற மாதிரி.....


Lion Drsekar
அக் 26, 2024 17:27

இவரது கந்தை இவரை ஒரு கலைஞானராக வளர்ந்ததே இதற்குதான் , தற்போது அவர் சுதந்திர போராட்ட வீரராகிவிட்டார், வளர்த்த .. ? இதுதான் உலகம், எங்கிருந்தோ வந்தான் இவரது மகனை பராமரிக்கார் நல்லபடியாக சென்றால் நல்லதுதானே . வந்தே மாதரம்


தமிழன்
அக் 26, 2024 15:26

ஒரு terted bus ஏற்பாடு செய்து முக்கிய இடங்களில் இருந்து இலவச பஸ் விட்டு இருந்தால் ஒரு படி விஜய் மேலே உயர்ந்து இருக்கலாம். இதற்கு அதிகம் செலவு ஆகாது. பாதுகாப்பு மட்டும் அல்ல இது மற்ற அரசியல் கட்சிக்கு எடுத்துக் காட்டாக இருக்கும். இப்பவும் கூட இதை செய்யலாம். மொத்தம் ஹெவை 23 பஸ்கள் 4 ட்ரிப் அவ்வளவு தான் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளையும் ஒரு புள்ளியில் இணைத்து விடலாம்.


sridhar
அக் 26, 2024 20:33

ஒரு பஸ்ஸில் நாற்பது பேர் பயணிக்கலாம் . உங்கள் கணக்குப்படி சில நூறு பேர்கள் தான் வரமுடியும்.


HoneyBee
அக் 26, 2024 13:13

ஆக மொத்தத்தில் குடிச்சிட்டு நடந்து வாங்க. கவுந்து படுங்க.. நான் இதை சினிமாவில் செய்து காட்டினேன்ல.. அப்பூடி செய்யுங்க


Ms Mahadevan Mahadevan
அக் 26, 2024 12:52

நல்லதை சொல்லுகிறார். சரி. ஆனால் அரசியல் சாக்கடையில் சேருவதற்கு அழைக்கிறார் அதுதான் இடிக்குது. பாவம் ஜோசப் விஜய். கருப்பு பானதில் சம்பளம் வாங்குபவர் எப்படி ஊழல் அற்ற ஆட்சி தருவார்?


M Ramachandran
அக் 26, 2024 12:26

பைக்கில் வாராதீங்க என்றால் மாநாட்டில் ஒவ்வொருவருக்கும் திரும்பும் போது ஒரு குட்டி ... கார் வழங்க படுமா? அவ்வளவு பணமா மாநாட்டு செலவு. அப்போ வரும் கட்சி பெரும் தலைவர்களுக்கு என்ன கவனிப்பு? எதற்கும் ஜாக்கிரதை மாநாட்டிற்கு வரும் புள்ளிகளில் சிலர் ED க்கு போட்டு கொடுத்து விட போகிறார்கள்.


Rajinikanth
அக் 26, 2024 11:34

புல்லிங்கோக்களுக்கு இவ்வளவு புத்திமதி சொல்லவேண்டியுள்ளது. என்ன சொன்னாலும் சிலர் தாங்கள் இஷ்டப்படி தான் செய்வார்கள்.


சம்ப
அக் 26, 2024 11:32

ஆமா நாளை ஒரு பைக் கூட அங்க இருக்காது


புதிய வீடியோ