உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை சந்திக்க வர வேண்டாம்; நானே வருகிறேன்: தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

என்னை சந்திக்க வர வேண்டாம்; நானே வருகிறேன்: தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்து சொல்ல, அவரது அரசு குடியிருப்பான குறிஞ்சி இல்லத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் குவிந்து வருகின்றனர். இதையடுத்து, தன்னை சந்திக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு, கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு முன், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதனால், அங்கு எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. அந்தப்பகுதி முழுதும், உதயநிதியை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களும் அதிகம் காணப்படுகின்றன.அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள். எம்.பி.,க் களும், உதயநிதியை சந்தித்து வாழ்த்துச் சொல்ல வருகின்றனர். திரையுலக பிரமுகர்களும் வரிசைக்கட்டி வந்து செல்கின்றனர். இதற்கிடையில், மாவட்ட வாரியாக கட்சியினர் திரண்டு வர உள்ள தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதை தவிர்க்க வேண்டும் என, உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.முதல்வரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில், நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கட்சி பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னை சந்திப்பதற்காக, சென்னைக்கு பயணம் செய்வதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்.பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து, உங்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
அக் 01, 2024 20:10

என்னை சந்திக்க வரவேண்டாம். ஆமாம், நான் எத்தனை பேருக்குத்தான் பிரியாணி விருந்து போடமுடியும். நான் சம்பாதித்தது எல்லாம் உங்களுக்கு பிரியாணி போட்டு செலவாயிடும் போல இருக்கே...??


Ramesh Sargam
அக் 01, 2024 19:53

திருட்டு ரயில் ஏறி வந்த வாரிசுக்கு என்ன ஒரு வரவேற்பு... முன்பெல்லாம் நானும் ஒரு தமிழன் என்று கூறிக்கொள்வதில் மிக மிக பெருமைப்பட்டேன். இன்று இதுபோன்ற அவலங்களை பார்த்து சிறுமைப்படுகிறேன்.


என்றும் இந்தியன்
அக் 01, 2024 17:31

இதோ ஒரு புது உளறல் வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் இதன் உண்மை அர்த்தம் இது தான். மோடி ஒழிக பிஜேபி ஒழிக என்று கூக்குரலிட நாங்கள் ரூ 200-500, பிரியாணி பொட்டலம், சரக்கு பாட்டில் கொடுத்து வருடம் பூராவும் குறைந்தது 3 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்.


nagendhiran
அக் 01, 2024 13:03

நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கல?


Anand
அக் 01, 2024 11:52

இவனோட இம்சை தாங்க முடியலே, கட்சிக்காரன் எவனும் கண்டுக்கல போல, மறைமுகமா வரிசைகட்டி வர சொல்கிறான்...


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 09:39

உதயநிதிக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை ன்னு உங்க அத்தையம்மா சொன்னதை நினைச்சு சங்கிஸ் கோபப்படுறாங்க .... அந்தம்மா சொன்னது ஓல்டு ஸ்டூடென்ட்ஸ் ஐ தான் ன்னு அவங்களுக்கு புரியல இளவரசர்வாள் .......


vbs manian
அக் 01, 2024 09:18

என்ன பணிவு மெய் சிலிர்க்கிறது.


Devanand Louis
அக் 01, 2024 09:00

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்


N Sasikumar Yadhav
அக் 01, 2024 08:32

மன்னர் நகர்வலம் வருவார் இளவரசனும் கிராம வலம்வருவார் எப்போதும்போல திமுக குண்டர்கள் மன்னர் குடும்பத்தை வரவேற்று போஸ்டர் ஒட்ட தயாராக இருக்க வேண்டும் வாழ்க வாழ்க திருட்டு திமுகவின் உட்கட்சி ஜனநாயகம்


சுராகோ
அக் 01, 2024 08:28

தேர்தல் கலம் காண வருவார் அப்பொழுது எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள் செங்கலோடு அல்லது இன்னொரு பொருளோடு.