உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வழக்கமாக ஏதாவது கேள்வி வைத்து இருப்பீர்கள். நானே சொல்லி விடுகிறேன். நீங்கள் கேட்கவே வேண்டாம். இந்த விவேக் சினிமா மாதிரி உங்கள் மனதில் என்ன இருக்கும் என்று எனக்கு தெரியும். அந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு இடம் கொடுக்காமல், எங்களுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கூட்டணி கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசி என்ன முடிவு எடுப்பார்களோ அது நடக்கும். தேவையில்லாமல் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உங்களுடைய சந்தேகங்களை கிளப்பி, பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டு விடுங்கள். யாரிடமும் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

பல்லவி
ஏப் 18, 2025 04:37

தமிழகத்தில் தலைகீழாக நின்று பாருங்க அண்ணே ஒரு ஆணியும் புடுங்க முடியாது


अप्पावी
ஏப் 17, 2025 23:13

இந்தி தெரியாம ஏன் கூட்டணி வெக்கிறீங்க? தூக்கி சாப்பிட்டு போயிருவாங்க. ஏக்நாத் ஷிண்டே நிலைமையாயிடப் போகுது.


J.Isaac
ஏப் 17, 2025 22:26

அதிமுகவிற்கு அழிவு காலம். பிள்ளைபூச்சி, அதிமுக மடியில்


M Ramachandran
ஏப் 17, 2025 20:12

பழனிக்கு பொட்டி வந்திருக்கும் அதனால் தொனி மாறியிருக்கு. சூடு வைத்தால் தனி நிலைக்கு வரும்.


Ray
ஏப் 18, 2025 08:44

அப்படி ஒரு கூட்டணி அரசு அமைந்தால்........


Oviya Vijay
ஏப் 17, 2025 18:39

எலெக்ஷன் வர்றதுக்குள்ள இந்த கூட்டணி புட்டுக்கிட்டாலும் புட்டுக்கிடும்...


பல்லவன்
ஏப் 17, 2025 17:20

தனது பதவியை தியாகம் செய்த அந்த அண்ணன் பெரும் தியாகி தான் போல


Kadaparai Mani
ஏப் 17, 2025 17:14

அதிமுக பாஜக கூட்டணி பற்றி திமுகவை விட டென்ஷன் ஆகி இருப்பது திமுக ஜால்ரா பெரும்பான்மை மீடியா தான் .


Narayanan
ஏப் 17, 2025 16:28

நட்டா தலைமையை மாற்றி வேறு ஒருவரை அறிவிக்க இயலாத பிஜேபி அண்ணாமலையை மாற்றிய செயல் நல்லதல்ல .என்ன செய்ய?அமிட்ஷா எடப்பாடியிடம் கமிட் ஆயிட்டார். மாற்றி விட்டார்கள். ரொம்ப அமைதியாகிவிட்டது தமிழகம். திமுகவிற்கு பெரிய நிம்மதி. எடப்பாடியை பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை அமிட்ஷாவிற்கு பயங்கர கில்லாடி. அதே மாதிரிதான் கனிமொழியிடமும் அமிட்ஷா கமிட் ஆகி திமுக அரசை காப்பாற்றி வருகிறார்.


Oviya Vijay
ஏப் 17, 2025 15:33

சொல்ல முடியாது... எதுவும் நடக்கலாம்...


Oviya Vijay
ஏப் 17, 2025 15:18

நான் தான் ஏற்கனவே சொன்னேனே... ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கூட்டணி அறிவிச்சது மிகப்பெரிய தப்புன்னு... யார் கண்டா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை