உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛‛பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் சொல்லாதீர்கள்; சங்கத்தில் சொல்லுங்கள்: நடிகை ரோகிணி வலியுறுத்தல்

‛‛பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் சொல்லாதீர்கள்; சங்கத்தில் சொல்லுங்கள்: நடிகை ரோகிணி வலியுறுத்தல்

சென்னை: ‛‛பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை'' என பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஹேமா கமிஷன் போன்று ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் விசாரணை கமிஷன் வேண்டும் என அந்தந்த மொழி நடிகைகள் உள்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப்.,8) நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொரிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.

5 ஆண்டுகள் தடை

பொதுக்குழு கூட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை என எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விசாகா கமிட்டி

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ‛‛பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும். புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்ல மாட்டோம்; புகார் மீது நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும். பாலியல் தொந்தரவு சினிமா துறையில் மட்டுமல்ல. மீ டூ சர்ச்சையின்போதே விசாகா கமிட்டி அமைத்தோம். நாங்கள் எங்கள் உரிமையை கேட்போம்'' என்றார். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி கூறியதாவது: பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. எங்களுக்கு புகாரளிப்பதற்காக 2019ம் ஆண்டே நடிகர் சங்க விசாகா கமிட்டி உருவாக்கப்பட்டது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர்.

தைரியமாக இருங்கள்

புகார் கொடுப்பவர்கள் யார் என்பதை வெளியே தெரியப்படுத்த மாட்டோம். பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள்; அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை. திரையுலகம் பற்றி அவதூறு பேசப்படுகிறது. சில புகார்கள் வந்தது; அந்த விவகாரம் வெளியே தெரியகூடாது என்பதற்காக அதனை வெளியே சொல்லவில்லை. எங்கு இருந்தாலும் நம் உறுப்பினர்களுக்கு பாலியல் பிரச்னை நடந்தால் தைரியமாக இருங்கள்; புகாரளிக்க முன்வாருங்கள். திரைத்துறையில் பாலியல் புகார்களை அளிக்க பிரத்யேக எண் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கலைநிகழ்ச்சி

கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி பேசுகையில், ‛‛நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவது நின்ற நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சேர்ந்து பங்கேற்பதாக உறுதியளித்தனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sankaran
செப் 18, 2024 10:43

முதல்ல இவர்கள் ஆபாச சினிமாவில் நடிப்பார்களாம்... ஆனா யாரும் தொல்லை குடுக்க கூடாதாம்... இவர்கள் மட்டும் அவர்களுக்கு பிடித்த நடிகர்களுடன் உறவு வைத்து கொள்வார்களாம்... அது அவர்கள் சுதந்திரமாம் .. யாரும் ஒன்னும் சொல்ல கூடாதாம்...கேள்வி கேட்க கூடாதாம்... இது என்ன நியாயம்... உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவே...


Muralidharan S
செப் 09, 2024 12:01

இஷ்டம் இல்லை என்றால், சினிமா வாய்ப்புக்களும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு வந்து விடலாம். யாரும் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்க முடியாது. சினிமா பட வாய்ப்புகளுக்காக அல்லது ஏதோ ஒரு நிர்பந்தங்களுக்காக, அந்த சமயங்களில் வாயை மூடிக்கொண்டு போய்விட்டு.. பல வருடங்கள் கழித்து அதை பற்றி பேசுவது மீடியாக்களுக்கு, அவை பரபரப்பாக விற்று சம்பாதிக்க தீனி போட உதவுமே தவிர, வேறு ஒன்றும் பிரயோஜனம் இருக்காது. தனி மனித ஒழுக்கத்தில் விடாப்பிடியாக பிடிவாதமாக இருந்தும் சாதிக்கலாம். இல்லையேல் வேண்டாம் என்று உதறிவிட்டு வந்து சாதாரண சம்பளத்தில் ஒரு குமாஸ்தாவாக கூட வேலை பார்த்து நிம்மதியாக வாழலாம். நேர்மையான வழியா இல்லை பூமியில் ???.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 11:52

இன்னும் ஒரு வருசத்துக்காவது குரங்கம்மை காரணமா எல்லாவனும் பயப்படுவான் .... தப்பா தொடமாட்டான் .... ரோகிணிக்கு டென்ஷன் இல்லாத வேலை ....


Saai Sundharamurthy AVK
செப் 09, 2024 09:53

கமல ஹாசன், வைரமுத்து , தனுஷ் போன்ற நடிகர்கள் மற்றும் திராவிட தலைவர்களின் பாலியல் தொல்லைகளை சற்று விளக்கி கூறினால் நன்றாக இருக்கும். கமலஹாசன் உங்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு செய்தியை சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பத்திரிக்கையில் படித்ததாக ஞாபகம். அதையும் ஊடகத்தில் கூறியிருந்தால் இந்நேரம் அந்த நடிகர் மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். அதை விட்டு விட்டு நடிகர் சங்கத்தில் கூறியதால் மூடி மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தானே உண்மை.... !!!


Barakat Ali
செப் 09, 2024 09:23

ஒரு நடிகைக்காகவே கார் ரேசு நடந்துச்சு ....... அவங்க பண்ணின அட்ஜஸ்ட்மென்ட் காகவே கார் பரிசாவும் கிடைச்சுது என்கிறாங்க .... அதை எப்படி பார்க்குறீங்கம்மா ????


Kasimani Baskaran
செப் 09, 2024 05:51

இவர்களிடம் சொன்னால் ஸ்ரீரெட்டி, சின்மயி போல வாய்ப்பு கிடைக்காமல் வீட்டில்தான் முடங்கிக்கிடக்க வேண்டும். மின்னும் நட்சத்திரங்கள் பலர் சமரசம் செய்து கொண்டுதான் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜோடியாக நடிக்கும் நடிகர்களே கூட பலர் தாய்க்குலங்களை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது கிழக்குக்கடற்கரை சாலைக்கு சென்று நாலு பார்ட்டிகளில் பங்கெடுத்தால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.


Ganesun Iyer
செப் 09, 2024 05:31

சங்கத்தில் இருக்கறவங்களே தப்பு செஞ்சா எங்கம்மா போய் சொல்றது..


Sathya
செப் 08, 2024 23:23

If anyone complained, what would they do? clowns,


Santhakumar Srinivasalu
செப் 08, 2024 21:21

சங்கத்தில் சொன்னா என்ன நடக்கும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 12:05

நாலு செவுத்துக்குள்ள காதும் காதும் வெச்சமேறி பஞ்சாயத்து ....


Venkatesh
செப் 08, 2024 21:16

இதெல்லாம் மானங்கெட்ட பிழைப்பு.... பெண்கள் மீது அத்துமீறல் செய்பவர்கள் மீது ஏன் பொது வெளியில் ஏன் சொல்லக் கூடாதாம்....இதில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் பாதுகாக்கப்படுகிறது இருக்கட்டும், இதுவரை அவ்வாறு எத்தனை முறையீடு வந்தது, அதில் சம்மந்தப்பட்ட ஆண் நடிகர் யார் யார் என்று தெரிவிக்கட்டுமே.... அவ்வாறு இதுவரை எந்த முறையீடும் வரவில்லை என்றால், ஏன் இந்த "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற அவசர அவசர முன் அறிவிப்பு....ஏதோ புகையுது....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை