உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு அல்ல; சொல்கிறார் திருமா!

திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு அல்ல; சொல்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு அல்ல' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடந்த நிகழ்ச்சியில், திருமாவளவன் பேசியதாவது: திராவிடம், தமிழ் தேசியம் வேறு வேறு என்று சொல்லில் வேறுபாடு இருக்கலாம். அந்த திராவிடம் தான் ஹிந்தியை எதிர்த்தது. ஹிந்தி எதிர்ப்பு என்பது தமிழர்களுக்காக தானே. தமிழ் மொழியை பாதுகாப்பதற்கான போராட்டம் தானே. திராவிட இயக்கம் தானே ஹிந்தி திணிப்பை எதிர்த்தது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்பது தமிழ் தேசியத்திற்கு ஆதரவானதா? எதிர்ப்பானதா? மாநில உரிமைகளை கோரியது திராவிட இயக்கங்கள் தானே.

திராவிடம்

மாநில உரிமை கோருவது தமிழ் தேசியத்திற்கு ஆதரவானதா? எதிர்ப்பானதா? திராவிடம் தமிழ் தேசியத்தின் வேர் என்பதை நிலைநாட்ட உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது. திராவிடம் என்ற ஒரு அரசியல் உருவான காரணத்தினால் தான், ஹிந்தி இந்த மண்ணிற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. திராவிடம் என்பது நெடுச்சுவராக இருந்தது. முதல்வர் பதவி என்பது அதிகாரம் இல்லாத அலங்கார பதவி. சர்வதேச பிரச்னைகளில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறங்கிவிட முடியும். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதனால் தான் அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

நிக்கோல்தாம்சன்
டிச 03, 2024 04:49

இந்தி எதிர்ப்பு என்று கூறும் திருமா , தமிழகத்தில் அதிக அளவில் இந்தி பேசி திரியும் தப்லீகி மதத்தினரை எதிர்பாரா ?


Rpalnivelu
டிச 01, 2024 11:06

திருடனும் த்ரவிஷமம் வேரு வேரு அல்ல.


venugopal s
நவ 29, 2024 06:12

பாஜகவும், ஹிந்து மதமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான் என்று சங்கிகள் கூறுவது போல் திருமா சொல்வதும் அபத்தமாக உள்ளது!


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 29, 2024 12:17

ஹிந்து மதத்தைக் காப்பாற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என்று சொல்லியிருக்கலாம் .... பாஜகவும், ஹிந்து மதமும் ஒன்றுதான் என எந்த சங்கியும் சொல்ல மாட்டார் ..... நேத்து நைட்டு சரக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா ????


என்றும் இந்தியன்
நவ 28, 2024 17:25

செய்தியில் சொன்ன கருத்துக்கள் இப்படி இருக்கின்றது மனிதன் என்றால் என்ன மனிதம் என்றால் இரண்டும் வேறு வேறு அல்ல மனிதம் என்பது மனிதர்களுக்காக. மனிதர்களிடம் இருப்பது மனிதம். ஆகவே மனிதர் மனிதம் பிரிக்கமுடியாதது அது தனித்தனி சொல்லாகாது இருந்த போதிலும்????????. போங்கடா கூமுட்டைகளா???திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று ஆகவே முடியாது. திராவிடம் - மூடர்கள் தமிழ் தேசியம் - தமிழர்களின் அடையாளம்


theruvasagan
நவ 28, 2024 17:21

அதாவது ஒடைஞ்ச பிளாஸ்டிக் சேர். வேங்கை வயல் ரெண்டும் வேறில்லை. ஒண்ணுதான். அதை ஏன்னு கேக்காம அதை செஞ்சவனுகளுக்கு கூழை கும்புடு போடணும். அதுதான் திராவிடம். அப்படி அடிமையாக இருககறதுதான் தமிழ் தேசியம்ன்னு அடிச்சு விடணும்.


Raa
நவ 28, 2024 16:37

மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது ஓதிய விடியோவெல்லாம் எடுத்துப்போடுங்கப்பா. 30 நாட்களில் கூசாமல் கூவுவது எப்படி என்ற புத்தகம் போடலாம்.


raja
நவ 28, 2024 16:24

அறிவாலைய அடிமைகளே...ரெண்டும் ஒன்னுன்னா அப்புறம் எதுக்கு இந்த திருட்டு திராவிடம்... தமிழ் என்றே சொல்ல சொல்லேன் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை...


Rajarajan
நவ 28, 2024 16:21

அதாவது, ஆரஞ்சு பழம் வேற, அதுல உள்ள சுளைகள் வேற. புரிஞ்சுதா ?? ஒரே குழப்பமா இருக்கில்ல. எனக்கும் அப்படிதான்.


Shunmugham Selavali
நவ 28, 2024 16:19

உன்னிடம் யாரவது விளக்கம் கேட்டார்களா? எதாவது ஒரு பிரச்சினையை தீர்க்க உன்னிடம் வழி உண்டா? உன் தொகுதி மக்கள் பிரச்சினை எத்தனை உண்டு தெறியுமா? விவசாயம் மேம்பட என்ன திட்டம் நீ எடுத்துவைத்தாய்? எந்த நன்மையாவது நடந்திருக்கிறதா? தூர்வாரத கல்வாய்களால் வடிகால் பிரச்சினை, கடைமடைக்கு பாசனநீர் வரவில்லை, இதெல்லாம் இவர் கண்ணுக்கு தெரியாது. திராவிடம் பற்றி பேசிவிட்டால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து எல்ல துன்பங்களையும் மறந்து வாழ்வார்கள். உனக்கு ஏன் தனிகட்சி, திமுகவில் சேர்ந்துவிடு. ஆடுத்த முதல்வர் பதவி உனக்குத்தான்.


ஆரூர் ரங்
நவ 28, 2024 15:14

ஒண்ணு ஏழரை சனி. இன்னொன்னு அஷ்டம சனி. அம்புட்டுதான். அது பிடித்தவன் தேற மாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை