உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் இரண்டாம் சோதனை ஓட்டம் வெற்றி

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் இரண்டாம் சோதனை ஓட்டம் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் இரண்டாம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=imhmf5db&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டதுகடந்த மாதம், பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 28) இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.முதற்கட்ட சோதனையில் 25 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகபட்சமாக 45 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 10 கி.மீ வரை இரண்டாம் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது.“படிப்படியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்” என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.“இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வழித்தட சோதனை மெட்ரோ இரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம்” என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

NARENDAR M
ஏப் 29, 2025 11:58

ரொம்ப பேசாதிங்க


அப்பாவி
ஏப் 29, 2025 08:37

ஆஹா... இன்னும்.ஒரு ஆயிரம் டிரைவர்களுக்கு வுட்டில் வேலை கிடைக்கப் போகுது ஹை.


Nada Rajan
ஏப் 28, 2025 21:36

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்


Karthik
ஏப் 28, 2025 21:24

வெளிநாடுகளில் ஆளில்லா மெட்ரோ ரயில் 10 - 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பாட்டில் உள்ளது. சுமார் 10 - 12 வருடங்கள் கழித்து தற்போது தான் தமிழ்நாட்டில் லோகோ பைலட் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் காண்கிறது. சுமார் பத்து ஆண்டுகள் பின் தங்கி உள்ளோம் சொல்லப் போனால்.


Venkatesh
ஏப் 28, 2025 22:38

ஒன்று செய்.... இது உனக்கு குறையாகத்தெரிந்தால் நாட்டை விட்டு ஒடி விடு அல்லது செத்து ஒழி


Ramesh Sargam
ஏப் 28, 2025 21:14

வாழ்த்துக்கள் மெட்ரோ நிறுவனத்துக்கு. கவனம்: திமுக திருடர்கள், ட்ரைவர்தான் இல்லையே என்று திருடிக்கொண்டு போய்விடுவார்கள். ஜாக்கிரதை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை