உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்- மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அவரை பின்பற்றி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் போதைப் பொருள் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப் பட்டது. அவர் போதைப்பொருட்கள் புழகத்தை தடுக்க சிறப்பாக பணி செய்த போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார்.தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்த்தார்.

மாணவர்களுக்கு பரிசு!

பள்ளி, கல்லூரிகள் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திய மாணவர்களுக்கு முதல்வர் விஜய் பரிசு வழங்கினார். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகளுக்கான முதல் பரிசை கோவை செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டது.

சிறுவனுக்கு சல்யூட்

போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழாவிற்கு, போலீசாரின் மகன் ஒருவர் போலீஸ் உடையில் வந்து இருந்தான். சிறுவனை பார்த்து முதல்வர் சல்யூட் அடித்ததும், சட்டென சிறுவனும் பதிலுக்கு சல்யூட் அடித்தான். உடனே அந்த சிறுவனை விஜய் தூக்கி சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்தார். தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!சென்னை மாநில கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புவீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

spr
ஆக 11, 2026 17:32

போதைப் பொருள், உணவில் மருந்தில் கலப்படம் கற்பழிப்புக்கு கொடூரக் கொலை என இந்தக் குற்றமானாலும் கடுமையான தண்டனை இருந்தாலொழிய அவை குறையாது. கோடிக்கணக்கில் வருமானம் வருமென்றால் கொஞ்ச காலம் சிறையில் இருந்தாலும் போதும் என்ற மனநிலையில் இருப்பவர் திருந்த மாட்டார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மேல்முறையீடு எதுவுமின்றி மரண தண்டனை சொத்துக்கள் பறிமுதல் என்ற அதிரடி நடவடிக்கை எடுத்தாலொழிய குற்றங்கள் குறையாது காவற்துறையின் ஆதரவு அல்லது அக்கறையின்மை இவற்றால் சில நேரங்களில் நேர்மையானவர்களும் இதில் தண்டிக்கப்படலாம் இப்படி ஒரு சில நிரபராதிகள் தண்டிக்கப்பட்டாலும், அப்படி நடந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அது நடக்க உதவியவர்கள் வழக்கறிஞர் காவற்துறை அதிகாரிகள் தீர்ப்பு வழங்கிய நீதிபதி உட்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் ஒரு குற்றவாளி கூடத் தப்பிக்கக் கூடாது வாக்கு வங்கி குறித்த கவலையில்லாமல் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நம் முதல்வர் செயல்பட வேண்டும் செய்வாரா


Balamurugan
ஆக 11, 2026 16:47

உங்கள் சினிமா வழியாக போதையை ஊக்குவித்ததில் உங்களுக்கும் பங்கு உள்ளது.


manian
ஆக 11, 2026 16:25

like prohibition this also is bound to fail.They are mixing it in drinks sweets and ice creams.Children going to school are easy targets.


M.Selvam
ஆக 11, 2026 15:45

போதையை ஒன்னு முழூசா ஒழியுங்க .. பொருள் சாப்பிட்டா போதை வரும் ..ஆனா திரவம் அதான் திரவம் டாஸ்மாக் வழியா அரசு விற்பது போதை தராதா ??அல்லது கும்பலா குடித்து கெட்டுப்போவோர் தானே இன்று அதிகமாக ? அதை கண்டுக்காம விட்டு இந்த இயக்கம் கண்துடைப்பு வேலை போல தான்


Arul Narayanan
ஆக 11, 2026 14:56

மூன்று மாத ஆட்சியில் போதைப் பொருட்கள் மொத்த விநியோகத்திற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயக்கம் நடத்துகிறார்களாம். ஓட்டுப் போட்ட கையோடு எல்லாரும் அரசு என்று ஒன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள் என்று தைரியம்.


manian
ஆக 11, 2026 14:04

All success to this programme.But what is the reality.The most powerful country US is struggling to contain drugs .In many countries black market trade flourishes.It is very common among rich people sport persons film stars and students.


Svs Yaadum oore
ஆக 11, 2026 13:15

பள்ளிகள் அருகில் கோவில் பஸ்டாண்ட் ஆஸ்பத்திரி என்று மக்கள் கூடும் அணைத்து இடங்களிலும் டாஸ்மாக் ...பஸ் செல்ல முடியாத மலை கிராமங்களில் கூட டாஸ்மாக் ......இங்கு டாஸ்மாக்கில் விற்கும் அத்தனை சரக்கும் எந்த தரக்கட்டுப்பாடு இல்லாத அசுத்த மோசமான கலப்பட கேவல திராவிட சாராயம் ...இந்த திராவிட சாராயம் தயாரிக்கும் அத்தனை கம்பெனி முதலாளிகளும் திராவிட மந்திரிகள்தான் ....மக்கள் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள் .....10 ரூபாய் கூட மதிப்பில்லாத கலப்பட சாராயம் டாஸ்மாக்கில் ஐம்பது ரூபாய்க்கு விற்கிறான் ....அதை குடித்து அழியும் திராவிட குடிமகன்கள் ....


Svs Yaadum oore
ஆக 11, 2026 13:12

சட்டசபையில் விவாதத்தின் போது ஒருத்தன் நீ நடத்துவது கார்பொரேட் சாராய கம்பெனி என்று கேள்வி கேட்டான் ....இதை கேட்ட எதிர்கட்சிக்காரன் நீ நடத்துவது லாட்டரி கம்பெனி என்று பதில் ...அந்த லாட்டரி கம்பெனியிடம் 900 கோடிகள் பிச்சை எடுத்து பிழைக்கிறவன் நீ என்று அடுத்தவன் பதில் ...இதை எல்லாம் கேட்ட மற்றொருவன் அது பிச்சை இல்லை நன்கொடை என்று வழக்கமான திராவிட தத்துவம் ....இதுக்கு மாற்றம் என்று வோட்டு போட்டவனுங்க ...


Svs Yaadum oore
ஆக 11, 2026 13:10

எல்லாம் நாடகம் .....வெறும் விளம்பரம் ரீல்ஸ் சினிமா ......இன்றைய செய்தியில் வீடு புகுந்து தாய் மகள் வெட்டி கொலை ......இதே போல விளம்பர நாடகம் செய்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்யுது?? ....இதை பற்றி சட்ட சபையில் கேள்வி எழுப்ப மக்களுக்கு எந்த நாதியுமில்லை ...


Venkatesan Ramasamay
ஆக 11, 2026 12:45

போதை இல்லாத தமிழகம் என்பது ...அர்த்தம் வேறு .. "பெண்கள் மீது போதை " ஒழிக்கப்படவேண்டும் .. " பெண் குழந்தைகள் மீது பாலியல் போதை " ...ஒழிக்கப்படவேண்டும் .. " அடுத்தவன் பொருள்மீது ஆசை " உதாரணத்துக்கு " சீமான் என்கிற சாமான் " திரள்நிதி திருடன் " என்பவன் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவன் ...ஒழிக்கப்படவேண்டும் .. " ஊழல் போதை "....ஒழிக்கப்படவேண்டும் .. சீமான் என்கிற சாமான் தமிழ்நாட்டைவிட்டே விரட்டியடிக்கப்படவேண்டும் ... மக்களை ஏமாற்றி ஏமாற்றி நிறைய " கோடி கோடியாய் சொத்து வாங்கி போட்டு ஊரை ஏமாற்றி வயிறு வளர்ப்பவன் ...ஒழிக்கப்படவேண்டும் ..


Anand
ஆக 11, 2026 13:16

அதாவது, அசைவ விருந்தில் முட்டைக்கு மட்டும் தடைவிதித்து ஜீவகாருண்யம் பேசுவது போல.