உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாலை பயணத்தால் விபரீதம்: லாரி -கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அதிகாலை பயணத்தால் விபரீதம்: லாரி -கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லாரி -கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q05rjp1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் கார் டிரைவர் மணக்குடி காளீஸ்வரன் 28, ராமநாதபுரம் ஜமுனா 55, ரூபிணி 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோவிந்தராஜ் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

bmk1040
ஆக 31, 2025 18:15

எனக்கு ஒண்ணும் ஆகாது என்ற அலட்சியத்தில் மதி மயங்கி கூண்டோடு கைலாசம் செய்கிறார்கள்.நம் ஊரில் எதுவும் சரியில்லை காசு அத்தனையும் தண்டம் செலவு ஆகையால் உஷாராக இருக்கவும் என காட்டு கத்தல் கத்தினாலும் புத்தி்இல்லை.


Rathna
ஆக 31, 2025 13:21

விதி அழைக்கிறது என்று சொல்வதை தவிர வேறில்லை. கடவுள் இறந்த ஆத்மாக்களுக்கு நல்ல வழி காட்டட்டும்.


K Jayaraman
ஆக 31, 2025 13:16

காரில் செல்பவர்கள் பகல் பொழுதில் செல்லுங்கள். ஒரு நாள் waste ஆகுமே என்று கருத வேண்டாம்.


அப்பாவி
ஆக 31, 2025 11:10

கதி சக்தி வாழ்க. போட்டுத்தள்ளி முன்னேறுவோம்


நிக்கோல்தாம்சன்
ஆக 31, 2025 09:56

பயணத்தால் விபரீதம் என்று போட்டிருக்கும் நீங்க சாலையில் தடுப்புகளை வைத்து விட்டு கண்டுகொள்ளாமல் செல்லும் அரசு பணியாளர்களை ஒன்றும் சொல்லாமல் சென்றிருப்பது தவறு


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 31, 2025 09:18

இந்த போக்குவரத்து போலிஸ் எதற்கு இருக்குன்னே தெரியல.. ஒருகாருக்கோ, வேனுக்கோ அல்லது லாரிகளுக்கு எதற்கு அத்தனை முகப்பு விளக்குகள் அதிலும் கண்ணை பறிக்கும் LED விளக்குகள் வேறு.. அரசு பஸ்களில் இரண்டிரண்டு முகப்பு விளக்குகள் போல அனைத்து நான்கு சக்கர மேலிருக்கும் வாகனங்களுக்கு அதிகபட்சமாக இருபுறம் இரண்டிரண்டு விளக்குகள் போதுமே.. தனக்கு மட்டும் அதிக வெளிச்சம் வேண்டும் என்ற சுயநலத்தால் அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற குருர புத்தியோடு வாகனத்தை ஓட்டுகிறார்கள் ஓட்டுனர்கள். என்னை கேட்டால் முக்கியமாக முகப்பு விளக்கு மற்றும் வேக கட்டுப்பாடு இருந்து வாகனத்தை ஓட்டினால் விபத்துகளை பெருமளவு தவிர்க்க முடியும்.....!!!


ديفيد رافائيل
ஆக 31, 2025 08:43

Dinamalar நீங்க நல்ல விஷயம் தான் சொல்றீங்க நம்ம மக்களுக்கு but ஒருத்தனுக்கும் அறிவு வர மாட்டேங்குதே. ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி விபத்து ஏற்பட்டு சாகனும் என்பது மக்கள் ஒவ்வொருத்தரின் தலையெழுத்து. இவனுங்க சாகட்டும், இவனுங்க நாட்டுக்கு பிடிச்ச சாபக்கேடு. இவனுங்களால bike ல் போன யாருக்கும் விபத்து வரல. அந்த அளவுக்கு happy.


chennai sivakumar
ஆக 31, 2025 08:42

என்னதான் கரடியாக கத்தினாலும் நம்ம ஆட்களுக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்


முக்கிய வீடியோ