உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவங்களை நம்பாதீங்க மக்களே...! இ.பி.எஸ்., சொன்ன மெசேஜ்

அவங்களை நம்பாதீங்க மக்களே...! இ.பி.எஸ்., சொன்ன மெசேஜ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தி.மு.க., அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன் எச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்த விதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் தி.மு.க., அரசு செயலிழந்து நிற்கிறது.தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதல்வர் ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதல்வர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.மழை, வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை! அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதல்வராகி உள்ள ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு குறியாக உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து தி.மு.க., அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாநகர மக்கள் அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Ms Mahadevan Mahadevan
அக் 15, 2024 17:48

மழை சேதம் என்பது இயற்க்கை ஆனது. எண்ணமுநேச்சரிக்கை எடுத்தாலும் சேதங்கள் ஏற்பட தன் செய்கின்றன. பொதுமக்களும் தங்கள் பகுதியை முறையாக பயன் படுத்த வேண்டும் தவீட்டு வாசலை தெருவை விட உயரமாக ஆக்கி கொள்வது, பஜாரில் கடை காரர்களும் உயரமாக வைத்து கொள்வது வாருகாலை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற குளம் குட்டைகளில்குப்பை கொட்டுவது ஆக்கிரமிப்பு செய்வது போன்ற தவறுகள் மழை நீர் ஓட வழி இல்லாமல் செய்வது . இவைகளை தவிர்த்தால் மழை நீர் வீட்டுக்குள் வராது


Devanand Louis
அக் 14, 2024 21:45

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து மரணம் மற்றும் விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்க வேண்டும்.


தமிழன்
அக் 14, 2024 22:28

பொறுப்பு ஏற்று என்ன செய்ய முடியும்.. அதிகபட்சம் பணி மாற்றம் செய்வாங்க அவ்வளவு தான்..


தமிழன்
அக் 14, 2024 20:57

மக்கள் ஸ்டாலினுக்கு தான் ஒட்டு போட்டாங்க.. ஆனால் இப்போ யாரோ தலைமை செயலராம். அவர் பேட்டி கொடுக்கிறாங்க.. இவர் யாருன்னு தெரியாது.. இன்னிக்கு இங்கே இருக்காங்க நாளைக்கு எங்கே எண்ணிக் கொண்டு இருப்பாங்களோ தெரியாது சென்னைக்கு இவர் பேசுகிறார் என்றால் அந்த அந்த மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்ட்டர் பேசுவார்களா.. முதல்வரை காணவில்லை என்று ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய போறாங்க.. வரச் வரச் சொல். ....முதல்வரை வரச் வரச் சொல். என மக்கள் கூச்சல் போடும் முன்பு முதல்வர் மைக் முன்னாடி வந்து ஒட்டு போட்ட மக்களுக்காக பேச வேண்டும்.. மக்களுக்கு தேவை மனிதாபிமானம் உள்ள அன்பான அணுகுமுறை தான்.. அதை அதிமுக மட்டுமே இன்றுவரையில் இந்த்னை தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் செய்கிறது.. அதற்காக அதிமுகவுக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கும் தமிழக மக்களை கண்டு பயந்து ஓடி ஒழிந்தது கொண்டு அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க சொல்றாங்க.. முன் ஏற்பாடுகளில் தோற்று போனால் அதிகாரிகள் மீது பழி சொல்லுவாங்க.. அவர்களை இடம் மாற்றம் செய்வாங்க மக்கள் கஷ்டத்தில் இருப்பாங்க.. ஆறுதல் சொல்ல கூட இவுங்க வர மாட்டாங்க.. நலனை நலனை கண்டு கொள்ளாத திமுக அரசை பணி பணி செய்ய கூடாது அதற்காக அடுத்த 20 ஆண்டுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ, தேர்தலில் நிற்க திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும். என்ற ஒற்றை கோரிக்கையை தமிழக மக்கள் முன் எடுக்க வேண்டும்.


Ramesh Sargam
அக் 14, 2024 20:31

எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் எப்படி மக்களுக்கு உதவப்போகிறீர்கள்? இப்படி வெறுமனே அசிங்க அரசியல் dirty politics மட்டும்தானா, அல்லது ஏதாவது உருப்படியாக செய்வீர்களா? இதுபோன்ற தருணத்தில் நீங்கள் மக்களுக்கு உதவிபுரிந்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, இனி வரப்போகும் தேர்தல்களில் அவர்கள் ஆதரவை மீட்டெடுக்க இதுவே சரியான தருணம். The ball is now in your court.


தமிழன்
அக் 14, 2024 22:29

மக்கள் பணி செய்ய தவறிய திமுக அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு மக்களும் செய்ய வேண்டும்.


raja
அக் 15, 2024 09:56

வீடியோ மூஞ்சியின் குடும்ப பரம்பரை கொத்தடிமையே எதிர் கட்சி அரசியல் பண்ணாமல் அவியலா பண்ணும்னு ஒன்கொள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னது நியாபகம் இருக்கா...


aaruthirumalai
அக் 14, 2024 20:31

உண்மையானதுதான்.


தமிழன்
அக் 14, 2024 22:30

சும்மா உண்மை என்றால் எப்படி.. நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருக்கிறது


RAMAKRISHNAN NATESAN
அக் 14, 2024 20:18

சென்னை மாநகராட்சி என்கிற அடிப்படையில் மேயர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பொறுப்பெடுத்து நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் ..... மீடியாவுக்கு விளக்க வேண்டும் .... ஆனா என்னோட வர்றவங்க வேற யாரும் அழுத்தமா லிப் ஸ்டிக் போடக்கூடாது ன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க ..... என்னத்தைச் சொல்ல ......


தமிழன்
அக் 14, 2024 22:27

உங்களால் முடியும். மக்கள் பணி செய்ய தவறிய திமுக அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு மக்களும் செய்ய வேண்டும். இப்போ ஆட்சியை கலைத்தால் மீண்டும் வந்து விடலாம்.. அதனால் மக்கள் பணி செய்ய அடுத்த 20 ஆண்டுகளுக்கு அனுமதிக்க கூடாது அதற்காக 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தடை விதிக்க வேண்டும்.. இதை ஒவ்வொரு அரசியல் ஆட்சியும் செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மக்களும் செய்ய வேண்டும்.


s.Raju
அக் 14, 2024 19:51

97% வடிகால் வேலைகள் முடிந்த நிலையில் மீதம் 3%முடித்தாயிற்றா...


தமிழன்
அக் 14, 2024 22:31

சும்மா கேள்வி மட்டும் கேட்காதீங்க..


yts
அக் 14, 2024 19:46

நாங்கள் ஏவ்வளவு பட்டாலும் 200 rs ஒட்டு போடுவோம்


Sundar R
அக் 14, 2024 19:44

மழை, புயல் வரும் முன்புதான் அதிக வேலை. பல மாதங்களுக்குச் செய்ய வேண்டிய அந்த வேலையை சரியாக செய்தால் மழைக்குப் பின்பு வேலை குறைவு.


Kadaparai Mani
அக் 14, 2024 19:15

Excellent EPS sir. Chennai is not only in Tamil Nadu. Equal attention should be given to all the districts and rural places.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை