வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யேய் யாரங்கே, உடனடியாக சூட் கேஸ் பார்சல்
சென்னை: சென்னை அண்ணா சாலை, மின் வாரிய தலைமை அலுவலகம் அருகே, தமிழக மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, மின் துறை பொறியாளர் அமைப்பு ஆகியவற்றின் சார்பில், நேற்று பெருந்திரள் கூட்டு முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கண்ணன், பொறியாளர் அமைப்பின் பொதுச் செயலர் அருள்செல்வன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரமணியம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த சங்கங்கள், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்துடன் இணைந்த அமைப்புகள். போராட்டம் குறித்து, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலர் சுப்ரமணியம் கூறியதாவது: 'மின் வாரியத்தில், ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும். பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த, 2023 டிச., முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை, விரைவாக வழங்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
யேய் யாரங்கே, உடனடியாக சூட் கேஸ் பார்சல்