உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.2,995 கோடிக்கு 2,400 மெகாவாட் மின்சாரம் வாங்குது மின் வாரியம்

ரூ.2,995 கோடிக்கு 2,400 மெகாவாட் மின்சாரம் வாங்குது மின் வாரியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தலின் போது, தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்வதற்காக, மின்வாரியம், 2026 பிப்., 1 முதல் மே, 15 வரை, தினமும், 2,400 மெகாவாட் மின்சாரத்தை கொள் முதல் செய்ய உள்ளது. இதன் உத்தேச மதிப்பு, 2,995 கோடி ரூபாய். தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இதுவே கோடை காலத்தில், 20,000 மெகாவாட்டை தாண்டுகிறது. அனுமதி இவற்றில் இருந்து தினமும் கிடைக்கும் 5,200 மெகாவாட் மின்சாரம், மின் தேவையை பூர்த்தி செய்ய போதவில்லை. இதனால், மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த சமயத்தில், தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதற்காக, 2026 பிப்., 1 முதல் மே, 15 வரை, 24 மணி நேரமும், 2,400 மெகா வாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இது தவிர தினமும், காலை மற்றும் மாலை, எட்டு மணி நேரம் உச்ச நேரத்தில், 2,400 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது. இதற்கு டெண்டர் கோருவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. ஒரு மெகா வாட்டில் இருந்து ஒரு நாளைக்கு, 24,000 யூனிட்கள் கிடைக்கும். எனவே, 24 மணி நேரமும் வாங்கப்பட உள்ள, 2,400 மெகா வாட்டில் இருந்து, 5.76 கோடி யூனிட் பெறப்படும். டெண்டர் ஒரு நாளைக்கு, 5.76 கோடி யூனிட் என, வைத்துக் கொண்டால், 104 நாட்களுக்கு, 599 கோடி யூனிட் மின் சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒரு யூனிட் மின் சாரம் விலை சராசரியாக, 5 ரூபாய் என, வைத்துக் கொண்டால், 2,995 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு செலவாகும். ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளுக்கு, 1,500 மெகாவாட் மின்சாரத்தை, 24 மணி நேரமும் வாங்க, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதற்கு, 32,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiMurugan Murugan
ஆக 13, 2025 19:29

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் தி மு கா கூட்டணி வந்தாலே மின்சார பற்றாக்குறை தான் தமிழகம் டெல்லிக்கு விற்ற நிலையெல்லாம் உண்டு. நிலக்கரி தரமற்ற கொள்முதல் செய்வது இவர்கள் தார்மீக பண்பு அதற்கு ஆற்காடு வீராசாமி சாட்சி ஒவ்வொரு வீட்டிற்கும் வர வேண்டிய மின்சாரம் 240volt ஆனால் இப்போது வருவது 209 அப்படி தான் உபயோகம் அடுப்பு மற்ற உபகரணங்கள் ரேரம் அதிகமாகும் பகிர்மானம் அதிகமாகும் மக்கள் உப யோகத் தேவை அதிகம் அதேசமயம் அவர்களிடம் இருந்து வசூலிப்பு அதிகம் ஆனால் சொல்வது பற்றாக்குறை .அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி நன்றாக ஏமாற்றுகிறது என்பதை புரிந்துக் கொள்ளவும்


S.L.Narasimman
ஆக 13, 2025 07:17

25% கமிசன் கலெக்சன் கரப்சன்னு கணக்கிட்டால் சுமார் 750 கோடிதான் வருது. ஊழைப்புக்கேற்ற வருமானம் இல்லை.


Svs Yaadum oore
ஆக 13, 2025 06:23

2023- 24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது...2021&22ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023&24ஆம் ஆண்டில் இது ரூ.6.72 ஆக அதிகரித்திருக்கிறது. இது 49.33% உயர்வு ஆகும். ..மின்சாரத்தின் விலை இந்த அளவுக்கு உயருவதற்கு வாய்ப்பே இல்லை..மொத்தமும் லஞ்ச ஊழல் விடியல் ...ப மா க அறிக்கை ....


Thravisham
ஆக 13, 2025 04:48

கொள்ளை யடிப்பதில் திருட்டு த்ரவிஷன்களின் புதிய அத்யாயம்


கோமாளி
ஆக 13, 2025 03:51

கொள்ளே அடிக்கும் துரைகள் நிறைந்த துறை. ₹ஆற்காட்டார் காலத்தில் ₹6.50க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ₹12க்கு வாங்கினார்கள்.


புதிய வீடியோ