உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தி.மு.க.,வின் மன்னர் ஆட்சி எடுபடாது: இ.பி.எஸ்.,

தமிழகத்தில் தி.மு.க.,வின் மன்னர் ஆட்சி எடுபடாது: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: '' 2026 ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.சேலம் மாவட்டம் வீரப்பம்பாளையம் பகுதியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: தி.மு.க., அரசியல் கட்சி இல்லை. குடும்ப கட்சியாக மட்டும் செயல்பட்டு வருகிறது. அக்கட்சியில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் பதவிக்கு வர முடியும். துணை முதல்வர் ஆக்கப்பட்டு உள்ள உதயநிதி தி.மு.க.,விற்காக என்ன சாதனை செய்தார்?.அக்கட்சியில் உதயநிதி மட்டும் தான் உழைத்தாரா? மற்றவர்கள் உழைக்கவில்லையா? தி.மு.க., மூத்த தலைவர்கள் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. உதயநிதி மட்டும் தான் தெரிந்தார். கட்சியின் அடையாளத்தை வைத்து மட்டும் உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட்டு உள்ளார்.அக்கட்சியில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு உள்ளது. 2026 சட்டசபை தேர்தலோடு தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இனி தமிழகத்தில் தி.மு.க.,வின் மன்னர் ஆட்சி எடுபடாது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ramesh
நவ 03, 2024 19:37

வாரிசு அரசியலை பற்றி நீங்கள் பேசுகிறீர்களா எடப்பாடி ? இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே தங்கள் கட்சி தானே . MGR மறைவுக்கு பிறகு அரசியல் என்றால் என்னவென்று தெரியாத ஜானகி அம்மாளை முதல்வர் ஆக்கியது தங்கள் ADMK கட்சி தானே .இது தான் தமிழ் நாட்டில் முதல் வாரிசு அரசியல் .


என்றும் இந்தியன்
நவ 03, 2024 18:44

ம-மன்னர்,மடச்சாம்பிராணிகள், மடையர்கள் என்று போட்டுக்கொள்ளலாம் உங்களுக்கு பிடித்த மாதிரி


Oviya Vijay
நவ 03, 2024 15:24

எனக்கு பின்னும் நூறாண்டுகள் கடந்தும் அதிமுக என்னும் பேரியக்கம் தொடரும் என்று ஜெயலலிதா சூளுரைத்தது இங்கே நினைவுக்கு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலோடு சின்னாபின்னமாக சிதறப் போகிறது என்பதை நினைத்தால் அந்த கட்சி எவ்வளவு பெரிய சுயநலவாதிகளிடம், துரோகிகளிடம் தற்போது சிக்கிக் கொண்டுள்ளது என்பது தெரிகிறது.


Anantharaman Srinivasan
நவ 03, 2024 14:21

அரசியலில் சம்பாதித்த பணத்தை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வாரிசு அரசியலே பாதுகாப்பானது.


முருகன்
நவ 03, 2024 14:01

மக்கள் பிரச்சனைகள் பேசினால் அரசியலில் சிறிது காலம் நிடிக்காலம் அதை விடுத்து இப்படி அடுத்த கட்சியை குறை கூறினால் மக்கள் நம்ப மாட்டார்கள்


வைகுண்டேஸ்வரன்
நவ 03, 2024 13:24

"உதியநிதி தி.மு.க.,விற்காக என்ன சாதனை செய்தார்?" என்று கேட்க இ பி எஸ் யார்? திமுக உறுப்பினரா? போயா யோவ், போயி ஸ்ட்ராங்கா டீ வாங்கிட்டு வா.


என்றும் இந்தியன்
நவ 03, 2024 18:48

அப்புறம் கிறித்துவர்கள் முஸ்லிம்கள் எதற்கு இந்துவை இந்து கடவுளை இந்து பழக்கவழக்கங்களை எப்போதும் சுட்டிக்காட்டுகின்றார். அவர்கள் தங்கள் கிறித்துவ/முஸ்லீம் கடவுளை / பழக்கவழக்கங்களை ஏன் குறை சொல்வதில்லை அதைப்போலத்தான் இதுவும். அதிமுக திமுகவை குறை கூறுகின்றது


வைகுண்டேஸ்வரன்
நவ 03, 2024 13:22

அதிமுக வை அடகு வைத்தவர். பத்து தோல்வி இ பி எஸ். இவரது மகன், ஜெயக்குமார் மகன், ஓ பி எஸ் மகன் என்று வாரிசுகளுக்கு அதிமுக வில் கட்சிப் பதவி, MLA, MP சீட் தரப்பட்டதே? இவரோட கூட்டணி வைத்த தேமுதிக வில் வாரிசுகள் தானே முன்னணித் தலைவர்கள்? வாரிசு என்பது ஒரு தகுதியும் அல்ல, வாரிசு என்பதற்காகவே ஒதுக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்களுக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருந்தால் வெற்றி பெறச் செய்வார்கள். இதை மன்னர் ஆட்சி என்று விமர்சிப்பதே அறிவற்ற செயல்.


மோகனசுந்தரம்
நவ 03, 2024 12:54

இந்த ஆள் எதை பேசினாலும் கேட்பதற்கோ படிப்பதற்கு கடுப்பாக உள்ளது


SUBBU,MADURAI
நவ 03, 2024 13:15

நான் எனக்கு மட்டும்தான் அப்படி இருக்குமோன்னு நெனச்சேன் உங்களுக்குமா?


Oviya Vijay
நவ 03, 2024 12:48

அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெத்து வேட்டு இந்த இபிஎஸ். உதார் விடுவதில் மட்டுமே கில்லாடி. மற்றபடி யூஸ்லெஸ்... அதிமுக சிதறிக் கிடக்கிறது என்று சொல்லிக் கொண்டுள்ளோம். ஆனால் எந்த அணியின் தலைமையும் உத்தமர்கள் அல்ல. அந்த கட்சியில் MGR-க்கு பின்னர் மக்கள் மனதை வென்றவர் யாருமில்லை. அதற்கு பின்னர் இரும்பு பெண்மணி என்று குறிப்பிடப்பட்ட ஜெயலலிதாவும் A1 குற்றவாளி தானே. TTV தினகரனோ, ஓபிஎஸ்-ஸோ, சசிகலாவோ அவரவர்கள் தங்கள் பங்கிற்கு தமிழ்நாட்டை சுரண்டிக் கொண்டனர். யார் கையும் சுத்தம் இல்லாத இந்த கட்சியை தூக்கி எறிந்து விட்டு இள ரத்தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்.


ராஜேந்திரன்,துறையூர்
நவ 03, 2024 13:20

ஏய் ஜோசப் விஜய்யின் ரசிக அணில் குஞ்சே இதை நீ ... மன்றாடி கேளு உன் ஆசையை நிறைவேற்றுவார்.


தமிழ்வேள்
நவ 03, 2024 12:25

வாரிசு அரசியல் பற்றி பேச இபிஎஸ்க்கு என்ன யோக்கியதை? போன முறை தனது மகனை அரசியலில் வளர்த்து விட முயற்சி செய்தது பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.. இம்முறையும் ஆட்சி அமைத்திருந்தால் மகனை நிச்சயம் வாரிசாக ஆக்கி விட்டிருப்பார்... சம்பாதித்த துண்டை காப்பாற்ற கட்சியும் அரசியலும்.. வாரிசு அரசியலை இவராலும் தவிர்க்க இயலாது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை