உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கித் திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு; மீண்டும் ஒத்திவைப்பு

அங்கித் திவாரியை விசாரிக்க அமலாக்கத்துறை மனு; மீண்டும் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளரிடம் ரூ.40 லட்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியை, விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நாளைக்கு (ஜன.10ம் தேதிக்கு) ஒத்திவைத்தார்.திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சமாக வாங்கி கைதானவர் அங்கித் திவாரி. தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளார். அமலாக்கத்துறை சார்பில் தற்போது அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கித் திவாரியை, விசாரிக்க, அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜன.3ல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையின்போது தங்கள் தரப்பும் உடன் இருக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையும் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், அங்கித் திவாரியை, விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார். ஏற்கனவே கடந்த ஜன.,5ம் தேதி விசாரணைக்கு வந்த போது இன்று ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Learn Politics
ஜன 10, 2024 17:22

Political revenge game. Central Govt must need to take very very strick action on DMK.


தாமரை மலர்கிறது
ஜன 09, 2024 19:58

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, பொய் கேஸ் போடப்பட்ட அங்கித் திவாரியை விடுவிக்க வேண்டும்.


Nancy
ஜன 09, 2024 17:39

அமலாக்கத்துறை விசாரணையின்போது தங்கள் தரப்பும் உடன் இருக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையும் மனுத்... - சரிதான்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ