வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த சமூக விரோதியிடம் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு, தெருவில் பிச்சை எடுக்க விட வேண்டும்.
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் முரு கன், 53. திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலக பகுதிகளில், ரோடு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருந்தார். முடிக்கப்பட்ட பணி மற்றும் நடக்கும் பணிகளுக்கான, மூன்று பில்களுக்கு பணம் வழங்க, மூன்றாவது மண்டல இளநிலை பொறியாளர் சுப்ரமணியனிடம் ஆவணங் களை சமர்ப்பித்தார். அவர், முருகனிடம், 8.40 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். முதல் கட்டமாக, 5 லட்சம் ரூபாய் தருமாறு தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த முருகன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, நல்லுார் மண்டல அலுவலகத்தில், சுப்ரமணியனிடம், 5 லட்சம் ரூபாயை முருகன் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், சுப்ரமணியனை கைது செய்தனர்.
இந்த சமூக விரோதியிடம் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு, தெருவில் பிச்சை எடுக்க விட வேண்டும்.